தமிழகம்

கோடம்பாக்கத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்: கடை மாற்றப்படும் என பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: கோடம்​பாக்​கத்​தில் டாஸ்​மாக் கடையை அகற்​றக்​கோரி மக்​கள் போராட்​டம் நடத்​தி​யதையடுத்​து, 7 நாட்​களில் கடை மாற்​றப்​படும் என, சட்​டப்​பேரவைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் உறு​தி​யளித்​தார்.

சென்​னை, கோடம்​பாக்​கம், டிரஸ்ட்​புரம் பகு​தி​யில் புளியூர் பிர​தான சாலை​யில் டாஸ்மாக் கடை எண்​.405 அமைந்​துள்​ளது. இந்த பகு​தி​யில் அதி​கள​வில் வீடு​கள் இருப்​ப​தால், அதி​கப்​படி​யான மக்​கள் நடமாட்​டம் காணப்​படு​கிறது.

மேலும், இந்த சாலை​யில் பள்​ளிக்​கூட​மும், ஆரம்ப சுகா​தார நிலை​ய​மும் இருப்​ப​தாக​வும், டாஸ்​மாக் கடை காரண​மாக பள்ளி மாணவர்​கள், நோயாளி​கள் அவதிப்​படு​வ​தாக குற்​றம்​சாட்டி அப்​பகுதி மக்​கள் நேற்று டாஸ்​மாக் கடையை முற்​றுகை​யிட்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதுகுறித்​து, தகவலறிந்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்​எல்​ஏ​வும், சட்​டப்​பேரவை தலை​வரு​மான ஜே.சி.டி.பிர​பாகர் போராட்​டத்​தில் ஈடு​பட்ட மக்​களை சமா​தானப்​படுத்தி உரிய நடவடிக்கை எடுப்​ப​தாக மக்​களுக்கு உறுதி அளித்​தார். இதையடுத்​து, போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​கள் அங்​கிருந்து கலைந்து சென்​றனர்.

இதுகுறித்​து, பேரவைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: இந்த கடை பள்​ளிக்​கூடத்​துக்கு அரு​கிலும், மக்​கள் நடமாட்​டம் அதி​கம் இருக்​கும் பகு​தி​யில் இடையூ​றாக இருப்​ப​தாக கூறி பல ஆண்​டு​களாக இதை அகற்ற வேண்​டும் என கோரிக்கை வைத்​துள்​ளனர்.

ஆனால், முந்​தைய அரசுகள் இதை கண்​டு​கொள்​ளாமல் இருந்​துள்​ளனர். முதல்​வர் நிச்​ச​யம் நடவடிக்கை எடுப்​பார் என்ற காரணத்​தால் மக்​கள் நேரடி​யாக போராட்​டத்​துக்கு வந்து விட்​டனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாக, மக்​கள் என்​னிடம் மனு கொடுத்​திருந்​தால், நடவடிக்கை எடுத்​திருப்​பேன். இந்த விவ​காரம் குறித்து டாஸ்​மாக் உயர​தி​காரி​களிடம் பேசி​யுள்​ளேன். இன்​னும் 7 நாட்​களில் இந்த கடை மாற்​றப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT