அண்ணா சாலையில் தீ விபத்து: 25 டயர் கடைகள் எரிந்து சேதம்

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்
சென்னை அண்ணா சாலை​யில் உள்ள டயர் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.

சென்னை அண்ணா சாலை​யில் உள்ள டயர் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.

Updated on
1 min read

சென்னை: அண்ணா சாலை​யில் ஏற்​பட்ட தீ விபத்​தில் 25-க்​கும் மேற்​பட்ட டயர் கடைகள் எரிந்து சேதம் அடைந்​தன. சென்னை அண்ணா சாலை பார்​டர் தோட்​டம், ஜி.பி. லேன் பகு​தி​யில் 50-க்​கும் மேற்​பட்ட பழைய மற்​றும் புதிய வாகன டயர் விற்​பனை செய்​யும் கடைகள் செயல்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு இங்​குள்ள டயர் கடை ஒன்​றில் திடீரென தீப்​பிடித்​தது. டயர்​கள் வேக​மாக எரி​யத் தொடங்​கிய​தால், அப்​பகுதி முழு​வதும் கரும்​புகை சூழ்ந்​தது. இதனால் தூங்​கிக் கொண்​டிருந்த மக்​கள் மூச்​சுத்​திணறல் ஏற்​பட்டு அலறியடித்து வீதிக்கு ஓடி வந்​தனர்.

இந்த சம்​பவம் தொடர்​பாக தீயணைப்​புத்​துறை​யினருக்கு கொடுக்​கப்​பட்ட தகவலின் பேரில், எழும்​பூர், வேப்​பேரி, கீழ்ப்​பாக்​கம், திரு​வல்​லிக்​கேணி, அசோக்​நகர், கோயம்​பேடு, எஸ்​பிளனேடு பகு​தி​களில் இருந்து தீயணைப்பு வாக​னங்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்​தன.

சுமார் 30-க்​கும் மேற்​பட்ட தீயணைப்பு வீரர்​கள் கொழுந்​து​விட்டு எரிந்த தீயை அணைக்​கும் பணி​யில் தீவிர​மாக ஈடு​பட்​டனர். சுமார் 5 மணி நேர போராட்​டத்​துக்​குப் பிறகு தீ முழு​மை​யாகக் கட்​டுக்​குள் கொண்டு வரப்​பட்​டது.

இருப்​பினும், தீ அடுத்​தடுத்த கடைகளுக்கு வேக​மாக பரவிய​தால் சுமார் 25-க்​கும் மேற்​பட்ட கடைகள் முற்​றி​லும் சேதமடைந்​தது. இந்த விபத்​தில் உயிர் சேதமோ, காயமோ ஏற்​பட​வில்​லை.

எனினும், கடைகளில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்​பிலான டயர்​கள், பொருட்​கள் எரிந்து நாச​மான​தாக போலீ​ஸார் கணக்​கிட்​டுள்​ளனர். விபத்து தொடர்பாக அண்ணா சாலை போலீ​ஸார் வழக்​குப் பதிந்து மின்​கசிவுக்கான காரணங்கள் குறித்து பல்​வேறு கோணங்​களில்​ வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>சென்னை அண்ணா சாலை​யில் உள்ள டயர் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.</p></div>
“அரசியலை தெரிந்து கொண்டனர்; இளைஞர்களை நம் பக்கம் திருப்ப வேண்டும்” - அன்புமணி அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in