சென்னை: ஆதிதிராவிடர் நல ஆணையர் த.ஆனந்த் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணியாற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் கல்வித் தகுதி, பணி மூப்பு, துறைத் தேர்வுகளின் தேர்ச்சி, ஒழுங்கு நடவடிக்கை நிலுவை ஆகியவிவரங்களின் அடிப்படை யில் 2025 ஜன.1 நிலவரப்படி தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்கள் பணிமூப்பு குறித்து ஆட்சேபம் ஏதேனும் இருப்பின் அல்லது பெயர் விடுபட்டிருப்பின் 7 நாட்களில் எழுத்துப்பூர்வமாக ஆணையரகத்துக்கு ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும். அதன் பிறகு, இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது