தமிழ்​நாடு வணி​கர் சங்கங்களின் பேரமைப்பு தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா

 
தமிழகம்

யுபிஐ சேவை கட்டண விதிப்பை எதிர்த்து நாளை அறப்போராட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் யுபிஐ சேவை கட்டண விதிப்​புக்கு எதிர்ப்பு தெரி​வித்து நாளை (அக்​.12) அறப்​போ​ராட்​டம் நடத்தப்படும் என தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா அறி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: மத்​திய அரசு டிஜிட்டல் மயமாக்​கல் கொள்​கை​யின்​படி, வங்கி பணப் ​பரிவர்த்தனை​களை இலவச யுபிஐ பணப்​பரிவர்த்​தனைக்கு மாற்றி, பொது மக்​களிடையே டிஜிட்​டல் மயமாக்​கலை ஊக்கப்படுத்தி வந்​தது. இதை பெரு​வாரி​யான மக்​கள் பயன்படுத்தி வரும் நிலை​யில், ரூ.2 ஆயிரத்​துக்கு மேல் உள்ள யுபிஐ பணப் ​பரிவர்த்​தனைக்கு அக்​.15 முதல் 0.4 சதவீதம் சேவை கட்​ட​ணம் விதிப்​ப​தாக​வும், அதை வணி​கர்​கள் தான் செலுத்த வேண்​டும் என்​றும் நிர்ப்​பந்​தத்தை மத்​திய அரசு ஏற்​படுத்தி இருக்கிறது.

இதற்கு தமிழகம் மட்​டுமல்​லாது அகில இந்​திய அளவிலும் மிகப்பெரும் எதிர்ப்பு உரு​வாகி இருக்​கி​றது. இதனால் வணி​கர்​கள் பாதிப்​படைவதோடு மட்​டுமன்​றி, விலை​வாசி​யும் கடுமை​யாக உயர்ந்​து, பொது​மக்​கள் பாதிக்​கப்​படும் நிலை​யும் உருவாக்கப்பட்டுள்​ளது.

யுபிஐ சேவை கட்​ட​ணத்தை மத்​திய அரசு தொலைநோக்கு சிந்​தனை​யுடன் ரத்து செய்ய வேண்​டுமென, தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்​பு, தமிழக அளவில் அமைப்பு ரீதி​யாக உள்ள 61 மாவட்​டங்களின் தலை​வர்​கள் தலைமை​யில் முக்​கிய நகரப் பகு​தி​களில் வணி​கர்​கள் அனை​வரும் ஒன்​றுகூடி, யுபிஐ சேவை கட்டண எதிர்ப்பு பேட்ஜ் அணிந்​து திங்கள்கிழமை அறவழிப் போராட்​டம் நடத்த உள்​ளனர். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT