தமிழகம்

டாஸ்மாக் முறைகேட்டில் கைதான கரூர் கார்த்திக்குக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு: செந்தில் பாலாஜியை விட செல்வாக்கானவர் என வாதம்

செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் கைதான கரூர் கார்த்​திக், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜியை​விட செல்​வாக்கு மிக்​கவ​ராக உள்​ள​தால் அவருக்கு ஜாமீன் வழங்​கக் கூடாது என அரசு தரப்​பில் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது.

முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி தொடர்​புடைய டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள கரூரைச் சேர்ந்த கார்த்​திக் என்​பவருக்​கு, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்யப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் என்​.ஆர்​.இளங்​கோ, டாஸ்​மாக் வழக்​கில் கைதாகி​யுள்ள கார்த்​திக்கை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர், ஏற்​கெனவே காவலில் எடுத்து விசா​ரணை நடத்தி விட்​டனர்.

வழக்குத் தொடர்​பான ஆவணங்​களை​யும் ஏற்​கெனவே பறி​முதல் செய்​து​விட்​டனர். இந்த வழக்​கில் ஒரு​வர் தலைமறை​வாக இருக்​கிறார் என்​ப​தற்​காக, கார்த்​திக்​குக்கு ஜாமீன் வழங்​காமல் நீண்ட நாட்​களுக்கு சிறை​யில் வைத்​திருக்க வேண்​டிய​தில்​லை.

எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்​டும் என வாதிட்​டார். பதி​லுக்கு காவல்​துறை தரப்​பில் ஆஜரான மாநில தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான் சத்​யன், இந்த வழக்​கின் விசா​ரணை இன்​னும் தொடக்க நிலை​யில்​தான் உள்​ளது.

விசா​ரணை தொடங்கி 25 நாட்​கள் ஆன நிலை​யில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு நெருக்​க​மான கார்த்​திக்​குக்கு எதி​ராக ஏராள​மான ஆதா​ரங்​கள் சிக்​கி​யுள்​ளன.

உண்​மை​யில் செந்​தில் பாலாஜியை​விட செல்​வாக்கு மிகுந்த நபராக கார்த்​திக் உள்​ள​தால் அவருக்கு ஜாமீன் வழங்​கி​னால், சாட்​சிகள் வாக்​குமூலம் அளிக்க தயங்​கு​வர். எனவே கார்த்​திக்​குக்கு ஜாமீன் வழங்​கக்​கூ​டாது என ஆட்​சேபம் தெரி​வித்​தார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, சிறை​யில் உள்ள கார்த்​திக்​குக்கு ஜாமீன் கோரும் மனு மீதான உத்​தர​வை தேதி குறிப்​பி​டா​மல்​ தள்​ளி வைத்​தார்​.

SCROLL FOR NEXT