அமைச்சர் ராஜ்மோகன்

 
தமிழகம்

சத்துணவில் சிக்கன் பிரியாணி வழங்க பரிசீலனை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு சத்​துண​வில் வாரம் ஒரு​முறை சிக்​கன் பிரி​யாணி வழங்க பரிசீலனை செய்​யப்​பட்டு வரு​வ​தாக பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் கூறினார்.

இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது :

அரசுப் பள்​ளி​களின் குழந்​தைகள் சீருடைகளை மேம்​படுத்​த​வும், காலை உணவுத் திட்​டத்​தில் உப்​பு​மாவுக்கு மாற்​றாக ஊட்​டச்​சத்து நிறைந்த உணவை கொடுக்க வேண்​டுமென​வும் அரசுக்கு கோரிக்கை வைத்​திருக்​கிறேன். இதே​போல், பள்ளி மாணவர்​களுக்கு மதி​யம் வழங்​கப்​படும் சத்​துண​விலும் வாரத்​துக்கு ஒருமுறை சிக்​கன்

பிரி​யாணி போடலாம் என நான் விரும்​பினேன். அந்த கோரிக்கையை​யும் கேட்​டுள்​ளேன். இது பல்​வேறு துறை​கள் சம்பந்​தப்​பட்​டது. அதுகுறித்து பரிசீலிப்​ப​தாக முதல்​வர் சொல்லியுள்​ளார்.

மத்​திய அரசு ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்​வித் திட்​டத்​தின்​கீழ் தரவேண்​டிய நிதியை வழங்​காமல் இருக்​கிறது. தமிழகத்​தின் வருங்​காலம் இதனால் பாதிக்​கப்​படு​கிறது. பல்​வேறு காரணங்​களை கூறி மொழி, கொள்கை பிரச்​னை​களுக்​காக மத்​திய அரசு நிதியை தடுப்​பது ஏற்​புடையதல்ல. அதை மத்​திய அரசு உடனே விடுவிக்க வேண்​டும். அதற்​கான முன்​னெடுப்​பு​கள் எடுக்​கப்​படும். நமது பட்​ஜெட்​டில் அதிக பணத்தை அரசுப் பள்​ளி​களுக்​காக செலவு செய்​கிறோம். இவற்றை அறி​வின் மீதான முதலீ​டாகவே பார்க்க வேண்​டும்.

கடந்த ஆட்​சி​யாளர்​களின் நல்ல திட்​டங்​கள் எது​வும் நிறுத்தப்படாது. அம்மா உணவகத்​தில் உணவுத்​தரம் மேம்படுத்தப்​பட்​டுள்​ளது. நல்ல திட்​டங்​களில் இருக்​கும் குளறுபடிகள் சரிசெய்​யப்​பட்டு தொடரும்.

தமிழ்த்​தாய் வாழ்த்​து

தமிழ்த்​தாய் வாழ்த்​துக்​கு​தான் எப்​போதும் முதன்​மை. நாங்​கள் இதில் தெளி​வாக இருக்​கிறோம். தமிழக அரசு நடத்​தும் அனைத்து விழாக்​களி​லும் தமிழ்த்​தாய் வாழ்த்​து​தான் முதலில்​ பாடப்​படும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT