ஏஐ படம்
சென்னை: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்க ஹெல்மெட், தண்ணீர் பாட்டில்களுடன் ரூ.277 கோடியில் 5.32 லட்சம் நவீன சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கான டெண்டரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கடந்த ஆக.28-ம் தேதி வெளியிட்டது.
அதில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் டெண்டர் பெற்றது. முந்தைய திமுக ஆட்சியைவிட குறைந்த விலையில் மாணவர் சைக்கிள் ரூ.4,369-க்கும், மாணவியர் சைக்கிள் ரூ.4,245-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளன. ஹெல்மெட், தண்ணீர் பாட்டிலுடன் சேர்த்து இவை முறையே ரூ.5,260, ரூ.5,130-க்குவாங்கப்பட உள்ளன.
இந்நிலையில் 2.37 லட்சம் மாணவர் மிதிவண்டிகள், 2.95 லட்சம் மாணவியர் சைக்கிள்களை ஆணை கிடைத்த 150 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.
புத்தகப் பைகளுக்கு டெண்டர்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2027-28-ம் கல்வியாண்டில் இலவசமாக வழங்குவதற்காக 55.93 லட்சம் புத்தகப் பைகளை கொள்முதல் செய்ய தமிழக பாடநூல் கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. அதன்படி, புத்தகப் பைகள்சிறிய அளவு, நடுத்தர அளவு, பெரிய அளவு என 3 வகைகளில் தயாரிக்கப்பட வேண்டும். ஆணை கிடைத்த 120 நாட்களுக்குள் புத்தகப்பைகளை விநியோகிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.