மதுரை: காவல் ஐஜி-க்கு எதிரான பணமோசடி புகாரை விசாரிக்க குற்றப்பிரிவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை கோச்சடைப் பகுதியைச் சேர்ந்த குணசேகரன்,மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காவல் பயிற்சிப் பள்ளி ஐஜிஜெயகவுரிக்குச் சொந்தமான வணிக நிலம் மற்றும் கட்டிடத்தை 17 ஆண்டுகளாகப் பராமரித்து வந்ததாகவும் ஐஜி கூறியபடி அந்தக் கடைகளை வாடைக்குவிட முன்பணமாக பலரிடம் ரூ.95 லட்சம் பெற்று அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.
பின்னர் அந்தக் கடைகளை வேறு நிறுவனங்களுக்கு வழங்கியதுடன் முன்பணத்தையும் தராமல் கொலை மிரட்டல் விடுத்து சிறை வைத்ததாகவும் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி ஆனந்த் விசாரித்து, மனுதாரரின் புகாரை மதுரை மாநகர குற்றப்புரிவு ஆய்வாளர் விசாரித்து குற்றம் நடந்திருந்தால் எப்ஐஆர் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.