தமிழகம்

4 நாட்களுக்கு தொடர் மழை: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி: தமிழகத்​தில் இன்று (நவ. 28) முதல் 4 நாட்​களுக்கு தொடர்ந்து கனமழை பெய்​யும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இலங்​கை​யின் தெற்​குப் பகு​தி​யில் உரு​வாகி​யுள்ள ‘டிட்​த்வா’ புயல் மெது​வாக நகர்ந்து வரும் 30-ம் தேதி புதுச்​சேரி-சென்னை இடையே கரையை கடக்​கும்.

இதனால் தமிழகத்​தில் இன்று (நவ. 28) தூத்​துக்​குடி, ராம​நாத​புரம், சிவகங்​கை, புதுக்​கோட்டை, டெல்டா மாவட்​டங்​கள், அதை ஒட்​டி​யுள்ள திருச்​சி,அரியலூர், பெரம்​பலூர் மாவட்​டங்​களில் தரைக்​காற்​றுடன் கூடிய மித​மான மழைப்​பொழிவு தொடங்​கும்.

படிப்​படி​யாக மழை தீவிர​மாகி நாளை​யும், வரும் 30-ம் தேதி​யும் ராம​நாத​புரம், புதுக்​கோட்​டை, சிவகங்​கை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகை, காரைக்​கால், மயி​லாடு​துறை, திருச்​சி, பெரம்​பலூர், அரியலூர், கடலூர் மாவட்​டங்​களில் 48 மணி நேர தொடர் கனமழை மற்​றும் மிக கனமழை​யாக நீடிக்​கும்.

ந.செல்​வகு​மார்

மேலும், இந்​தப் புயல் வரும் 29, 30 மற்​றும் டிச.1-ம் தேதி​களில் சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணாமலை, ராணிப்​பேட்​டை, புதுச்​சேரி ஆகிய வடகடலோர மாவட்​டங்​களில் 48 மணி நேர தொடர் தீவிர மழைப்​பொழி​வைக் கொடுக்​கும்.

இதன் காரண​மாக டெல்டா மாவட்​டங்​கள் முதல் சென்​னை, திரு​வள்​ளூர் மாவட்​டங்​கள் வரை கடலோரப் பகு​தி​களில் வெள்​ளப் பாதிப்​பு​கள் ஏற்படும். ராம​நாத​புரம், புதுக்​கோட்​டை, சிவகங்கை உள்​ளிட்ட தென் மாவட்​டங்​களுக்​கும், திருச்​சி, அரியலூர், பெரம்​பலூர், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, வேலூர் உள்​ளிட்ட வட உள் மாவட்​டங்​களுக்​கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT