புதுச்சேரியில் போலி மருந்துகள் கைப்பற்றப்பட்ட கிடங்குகளில் ஆய்வு

புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள கிடங்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட   போலி மருந்துகளை  கணக்கிடும் அதிகாரிகள். | படம்: சாம்ராஜ் |

புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள கிடங்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போலி மருந்துகளை கணக்கிடும் அதிகாரிகள். | படம்: சாம்ராஜ் |

Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் போலி மருந்துகள் வைக்​கப்​பட்​டிருந்த கிடங்​கு​களில் 2-வது நாளாக நேற்று ஆய்வு மற்​றும் மருந்​துகளைக் கணக்​கிடும் பணி நடை​பெற்​றது.

புதுச்​சேரி​யில் இருந்து பிரபல மருந்து நிறு​வனத்​தின் பெயரில் போலி மருந்​துகள் தயாரிக்​கப்​பட்​டு, பல்​வேறு மாநிலங்​களில் விற்​பனை செய்​வ​தாக சிபிசிஐடி போலீ​ஸாருக்​குத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, மருந்​துகளை மொத்​த​மாக விற்​பனை செய்த சீர்​காழி ராணா, காரைக்​குடி மெய்​யப்​பன் ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர். விசா​ரணை​யில், புதுச்​சேரி ரெட்​டி​யார்​பாளை​யம் பகு​தி​யைச் சேர்ந்த ராஜா என்​பவர், மேட்​டுப்​பாளை​யம் தொழிற்​பேட்​டை​யில் போலி மருந்து தயாரிக்​கும் தொழிற்​சாலையை நடத்தி வந்​ததும், ராஜா உள்​ளிட்ட 10 பேர் தலைமறை​வானதும் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, போலி மருந்து தயாரிக்​கும் தொழிற்​சாலை மற்​றும் 4 கிடங்​களுக்கு நேற்று முன்​தினம் சீல் வைக்​கப்​பட்​டன. மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை​யினர் அங்​கிருந்த மருந்​துகளை ஆய்​வுக்கு எடுத்து சென்​றனர். இரண்​டாம் நாளாக நேற்றும் ஆய்வு மற்​றும் மருந்​து, மாத்​திரைகள் கணக்​கிடும் பணி நடை​பெற்​றது.

வெளிமாநில போலீஸார்... இந்​நிலை​யில், நாடு முழு​வதும் போலி மருந்​துகள் விற்​பனைக்கு அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக​வும் தகவல் வெளி​யானது. இதையடுத்​து, கைதானவர்​களிடம் விசா​ரிக்க டெல்​லி, ஆந்​திர மாநிலத்​தில் இருந்து போலீ​ஸார் புதுச்​சேரி வந்​துள்​ளனர்.

இதுகுறித்து காவல் துறை மற்​றும் மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை தரப்​பில் கூறிய​தாவது: பிரபல நிறு​வனம் தயாரிக்​கும் நீரிழி​வு, ரத்​தக் கொதிப்​பு, இதய நோய், நரம்​பியல் உள்​ளிட்ட நோய்​களுக்​கான மருந்​துகள் புதுச்​சேரி​யில் போலி​யாகத் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன.

தற்​போது சீல் வைக்​கப்​பட்​டுள்ள தொழில்​சாலை​யில் பல கோடி மதிப்​பிலான இயந்​திரங்​கள் உள்​ளன. சீல் வைக்​கப்​பட்ட 4 கிடங்​கு​களில் கோடிக்​கணக்​கான மதிப்​பிலான மாத்​திரைகள் உள்​ளன.

இந்த தொழிற்​சாலை 5 ஆண்​டு​களாக செயல்​பட்டு வந்​துள்​ளது. நாடு முழு​வதும் பல நூறு கோடிகளுக்கு மேல் போலி மருந்​துகளை விற்​றுள்​ளது. இங்குதயாரிக்​கப்​பட்ட மருந்​துகள் இன்​னும் 6 கிடங்​களில் இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ளதைக் கண்​டறிந்​துள்​ளோம்.

அவை குரும்​பாபேட் பகு​தி​யில் உள்​ளன. அங்கு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. அனைத்து கிடங்​கு​களி​லும் ஆய்​வும், கணக்​கெடுப்​பும் நடை​பெறும். இந்த மருந்​துகளால் பாதிப்பு ஏதும் ஏற்​படுமா என்​பது ஆய்​வுக்​குப் பிறகே தெரிய​வரும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

<div class="paragraphs"><p>புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள கிடங்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட   போலி மருந்துகளை  கணக்கிடும் அதிகாரிகள். | படம்: சாம்ராஜ் |</p></div>
“செங்கோட்டையன் எந்தக் கட்சியில் சேர்ந்தால் எங்களுக்கு என்ன?” - மதுரையில் பழனிசாமி காட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in