தமிழகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணப்பட்டுவாடாவை தடுக்கக் கோரிய மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​காளர்​களைக் கவரும் வகை​யில் வாக்​காளர்​களுக்கு பரிசுப் பொருட்​கள் மற்​றும் பணப்​பட்​டு​வாடா செய்​வதை தடுக்​கக்​கோரி தாக்​கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்​ளு​படி செய்​துள்​ளது.

இது தொடர்​பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த பொதுநல மனு​வில், “கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பணப்​பட்​டு​வாடா காரண​மாக தஞ்​சாவூர் மற்​றும் அரவக்​குறிச்சி தொகு​தி​களில் தேர்​தல் தள்​ளிவைக்​கப்​பட்​டது. தற்​போது நடை​பெறும் தேர்​தலிலும் வாக்​காளர்​களைக் கவரும் வகை​யில் பல்​வேறு தொகு​தி​களில் வேட்​பாளர்​கள் சார்​பில் பட்​டுப்​புட​வை​கள் உள்​ளிட்ட பரிசுப் பொருட்​களும், வாக்​காளர்​களுக்கு ரூ.10 ஆயிரம் வரை ரொக்​க​மும் கொடுக்​கப்​பட்டு வரு​கிறது.

          

வாக்​குக்கு பணம் கொடுப்​பதும், பணம் பெறு​வதும் குற்​றம் என விளம்​பரம் வெளி​யிட தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும். அத்​துடன் பணப்​பட்​டு​வா​டாவை தடுக்​கும் வகை​யில் கூடு​தல் பறக்​கும் படைகளை அமைத்து கண்​காணிக்​க​வும், பணப்​பட்​டு​வாடா மற்​றும் பரிசுப் பொருட்​கள் விநி​யோகம் தொடர்​பாக பொது​மக்​கள் தாமாக முன்​வந்து புகார் அளிக்​கும் வகை​யில் புகார் எண்​களை வெளி​யிட​வும் தேர்​தல் ஆணை​யத்தை அறிவுறுத்த வேண்​டும்.

பணப்​பட்​டு​வாடா காரண​மாக தேர்​தல் தள்ளி வைக்​கப்​பட்​டாலோ ரத்து செய்​யப்​பட்​டாலோ அது​வரை அந்த தொகு​திக்கு தேர்​தல் ஆணை​யம் செய்த செல​வு​களை சம்​பந்​தப்​பட்ட வேட்​பாளர் அல்​லது அக்கட்​சித் தலை​வரிட​மிருந்து வசூலிக்க உத்​தர​விட வேண்டும்.

குறிப்​பாக தேர்​தல் நேரத்து கருப்​புப் பண நடமாட்​டத்​தைத் தடுக்க உரிய நடவடிக்​கைகளை எடுக்க சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு உத்​தர​விட வேண்​டும்” எனக்​கோரி​யிருந்​தார்.

முதல்வர் வாகனம் சோதனை: இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது தமிழக அரசுத் தரப்​பில் ஆஜரான தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், “பறக்​கும் படை அதி​காரி​கள் முதல்​வரின் வாக​னத்​தையே மறித்து சோதனை நடத்​தி​யுள்ளனர். பணப்​பட்​டு​வாடா நடவடிக்​கைகளைத் தடுக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு அனைத்து உதவி​களை​யும், ஏற்​பாடு​களை​யும் தமிழக அரசு செய்து கொடுத்​துள்​ளது” என்​றார்.

தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் நிரஞ்​சன் ராஜகோ​பாலன், “தேர்​தலில் வாக்​காளர்​களுக்கு பரிசுப் பொருட்​கள் மற்​றும் பணப்​பட்​டு​வாடா செய்​யப்​படு​கிறதா எனத் தேர்​தல் ஆணை​யம் உன்​னிப்​பாகக் கண்​காணித்து வரு​கிறது. பரிசுப் பொருட்​கள் மற்​றும் பணப்​பட்​டு​வா​டாவை தடுக்க அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக

தமிழகம் முழு​வதும் 2 ஆயிரத்து 169 பறக்​கும் படைகளும், 2 ஆயிரத்து 166 கண்​காணிப்​புக் குழுக்​களும் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளன” என விளக்​கம் அளித்​தார்.

அனைத்​துத் தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “தேர்​தலை ஜனநாயக வழி​யில் அமை​தி​யான முறை​யில் நடத்த தேர்​தல் ஆணை​யம் அனைத்து ஏற்​பாடு​களை​யும் செய்து உரிய நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது” எனக்​கூறி வழக்​கைத் தள்​ளு​படி செய்து உத்​தரவிட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT