ஆண்​டாள் - ரெங்​கமன்​னார் திருக்கல்​யாண திரு​விழா: ஸ்ரீ​வில்லிபுத்​தூரில் பக்​தர்​களுக்கு கல்யாண விருந்து

ஆண்​டாள் - ரெங்​கமன்​னார் திருக்கல்​யாண திரு​விழா: ஸ்ரீ​வில்லிபுத்​தூரில் பக்​தர்​களுக்கு கல்யாண விருந்து
Updated on
1 min read

ஸ்ரீவில்​லிபுத்​தூர்: ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயி​லில் நேற்று இரவு ஆண்​டாள் - ரெங்​கமன்​னார் திருக்​கல்​யாணம் கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் கலந்​து​கொண்ட 15 ஆயிரம் பக்​தர்​களுக்கு கல்​யாண விருந்து வழங்​கப்​பட்​டது.

108 வைணவ திவ்ய தேசங்​களில் ஒன்​றான ஸ்ரீவில்​லிபுத்​தூர் பெரி​யாழ்​வார், ஆண்​டாள் ஆகிய இரு ஆழ்​வார்​கள் அவதரித்த சிறப்​புக்​குரியது. ஆண்​டாள் மார்​கழி மாதத்​தில் பாவை நோன்​பிருந்து பங்​குனி உத்​திர நாளில் ஸ்ரீரெங்​கம் ரெங்​கமன்​னாரை திரு​மணம் புரிந்​தார்.

ஸ்ரீவில்​லிபுத்​தூரில் ஆண்​டாள், கரு​டாழ்​வார் சமேத​ராக ரெங்​கமன்​னார் மணக்​கோலத்​தில் அருள்​பாலிக்​கிறார். இங்கு ஆண்​டு​தோறும் பங்​குனி உத்​திர நாளில் ஆண்​டாள் - ரெங்​கமன்​னார் திருக்​கல்​யாணம் நடை​பெறு​வது வழக்​கம். நேற்று பங்​குனி உத்​திரத்​தையொட்டி ஆண்​டாள் கோயில் ஆடிப்​பூர கொட்​டகை​யில் உள்ள மணப்​பந்​தலில் மாலை 4.30 மணிக்கு ரெங்​கமன்​னார், பெரி​யாழ்​வார் பூர்ண கும்​பத்​துடன் எழுந்​தருளினர். மாலை 5 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் அங்​கமணி​களு​டன் புறப்​பாடாகி மணப்​பந்​தலில் எழுந்​தருளி​னார். தொடர்ந்து பெரி​யாழ்​வார் ஆண்​டாளை ரெங்​கமன்​னாருக்கு கன்​னிகா தானம் வழங்​கும் வைபவம் நடை​பெற்​றது.

இதில் பெரி​யாழ்​வாரின் 225-வது வம்​சாவழி​யான வேத​பி​ரான் பட்​டர் சுதர்​சனன் ஆண்​டாளை ரெங்​கமன்​னாருக்கு கன்​னிகா தானம் செய்து வைத்​தார். தொடர்ந்து திருப்​பதி ஸ்ரீனி​வாசப் பெரு​மாள் சீதன​மாக அனுப்​பிய பட்டு வஸ்​திரம் உள்​ளிட்ட மங்​களப் பொருட்​கள் ஆண்​டாளுக்கு அணிவிக்​கப்​பட்​டு, இரவு 7 மணிக்கு மேல் திவ்ய தம்​ப​தி​கள் ஆண்​டாள் - ரெங்​கமன்​னார் திருக்​கல்​யாணம் நடை​பெற்​றது.

அப்​போது பெண்​கள் மாங்​கல்ய கயிறு மாற்​றிக் கொண்​டனர். பக்​தர்​களுக்கு மாங்​கல்ய கயிறு, மஞ்​சள், குங்​குமம் பிர​சாதம் வழங்​கப்​பட்​டது. இதில் 15 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பக்​தர்​களுக்கு திருக்​கல்​யாண விருந்து வழங்​கப்​பட்​டது. விழா​வில் ஸ்ரீவில்​லிபுத்​தூர் மணவாள மாமுனிகள் மடத்​தின் சடகோப ராமானுஜ ஜீயர், செயல் அலு​வலர் சர்க்​கரை​யம்மாள் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

ஆண்​டாள் - ரெங்​கமன்​னார் திருக்கல்​யாண திரு​விழா: ஸ்ரீ​வில்லிபுத்​தூரில் பக்​தர்​களுக்கு கல்யாண விருந்து
ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தை பாதிப்பு: வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.203 அதிகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in