தமிழகம்

டிச.18-ல் புதுச்சேரி பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்பு

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா மற்றும் பல்கலைக்கழகத்தின் 40 ஆண்டுகால கல்விச் சிறப்பு விழா ஆகியவை வரும் டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளன. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க இருக்கிறார்.

2025-ம் ஆண்டுக்கான பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கும் இந்த பட்டமளிப்பு விழா, புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதி சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு உரையாற்ற உள்ளார்.

இதற்கான அழைப்பை புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து வழங்கினார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், 31-வது பட்டமளிப்பு விழா மற்றும் பல்கலைக்கழகத்தின் 40 ஆண்டுகால கல்விச் சிறப்பு விழாவில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT