தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசனை ஆதரித்து பல்லாவரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தபோது.

 
தமிழகம்

“எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைப்பது சந்தேகம்” - அதிமுகவை வாரும் பிரேமலதா

செய்திப்பிரிவு

“எ​திர்க்​கட்சி அந்​தஸ்து கூட அதி​முக-வுக்கு கிடைப்​பது சந்​தேகம்” என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​தார்.

அம்​பத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் திமுக வேட்​பாளர் அ.பு.பூர்​ணி​மாவை ஆதரித்து பிரேமலதா விஜய​காந்த், பாடி​யில் நேற்று பிரச்​சா​ரம் செய்​தார்.

          

அப்​போது அவர் பேசி​ய​தாவது: இன்​றைய சூழலில் அரசி​யலுக்கு பெண்​கள் வரு​வதே மிக​வும் கடினம். அந்த வகை​யில், இன்​றைக்கு ஒரு பெண் வேட்​பாள​ரான பூர்​ணி​மாவுக்​காக நான் பிரச்​சா​ரம் செய்​வதை நினைத்து உண்​மை​யிலேயே ஒரு பெண்​ணாக மிக மிக சந்​தோஷப்​படு​கிறேன்.

பெண்​கள் தான் இந்த நாட்​டின் கண்​கள் என மறைந்த தேமு​திக தலை​வர் விஜய​காந்த் அடிக்​கடி சொல்​வார். அதற்​கேற்ப பெண்​களுக்​கான அதி​க​மான வாக்​குறு​தி​களை, தேர்​தல் அறிக்​கை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கொடுத்​திருக்​கி​றார்.

எதிர்​கட்​சித் தலை​வர் ஃபிரிட்ஜ் தரு​வ​தாக சொல்​லி​யிருக்​கி​றார். ஆனால், இன்​றைக்கு அனை​வரது வீட்​டிலும் ஃபிரிட்ஜ் இருக்​கிறது. அதேசம​யம் திமுக வழங்​கும் ரூ.8 ஆயிரம் மதிப்​புள்ள கூப்​பனை பயன்​படுத்தி உங்​களுக்கு வேண்​டிய பொருளை வாங்​கிக் கொள்​ளலாம். அதே​போல் மாண​வர்​களுக்கு காலை உணவுத் திட்​டம் விரி​வாக்​கம், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிர​மாக உயர்​வு, உயர்​கல்வி மாண​வர்​களுக்கு இலவச மடிக்​கணினி என ஏராள​மான திட்​டங்​களை திமுக அறி​வித்​துள்​ளது.

கடந்த திமுக ஆட்​சி​யில் அம்​பத்​தூர் தொகு​தி​யில் மொத்​த​மாக ரூ.880 கோடி​யில் சாலை பணி​கள், பாடி குப்​பம் ரயில் நிலை​யம் மேம்​பாலம், மழைநீர் வடி​கால், விளை​யாட்டு திடல், பூங்​காக்​கள் என பல திட்​டங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளன. இந்த தேர்​தலில் எத்​தனை முனை போட்டி நில​வி​னாலும் எதிரில் இருப்​பவர்​களுக்கு கூடத் தெரி​யும், தேர்​தல் முடிவு​கள் எப்​படி இருக்​கும் என்​று.

அதி​முக-வுக்கு எதிர்​கட்சி அந்​தஸ்து கூட கிடைக்​குமா என்​பது சந்​தேகம். மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி, மறைந்த தேமு​திக தலை​வர் விஜய​காந்த், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆகி​யோரின் ஆசி​யுடன் திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி, தமி​ழ​கத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களில் வென்று ஆட்சி அமைக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்​.இதே போல் தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசனை ஆதரித்து பல்லாவரத்திலும் நேற்று பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT