தமிழகம்

தொடர் மின்வெட்டால் விவசாயம் பாதிப்பு: அரசு உடனடி நடவடிக்கை எடுக்க தேமுதிக வலியுறுத்தல்

மு.சக்தி

சென்னை: “விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி முழுமையாக செயல்படுத்தப்படாதது ஒரு புறம்; மின்வெட்டால் பாதிக்கப்படுவது மறுபுறம் என்று விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பயிர்கள் வாடியதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும் வேதனையையும் சந்தித்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி முழுமையாக செயல்படுத்தப்படாதது ஒரு புறம்; மின்வெட்டால் பாதிக்கப்படுவது மறுபுறம். "உரலுக்கு ஒரு விவசாயிகள் பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி” என்பது போல் விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 14.23 லட்​சம் விவ​சா​யிகள் பயன்​பெறும் வித​மாக பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்​ளு​படி செய்திருக்​கிறது தவெக அரசு. ஆனால், தேர்​தல் வாக்​குறு​தி​யில் சொன்​னபடி விஜய் செய்​ய​வில்​லையே என விவசாயிகளும் விவ​சாய சங்​கங்​களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில், தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT