பிரவீன் சக்கரவர்த்தி

 
தமிழகம்

“விஜய்யை சந்தித்தது காங்கிரஸ் தலைமை அனுமதியுடன்தான்” - பிரவீன் சக்கரவர்த்தி புதுக் குண்டு

செய்திப்பிரிவு

‘நடிகர் விஜய்யை காங்​கிரஸ் தலைமை அனு​ம​தி​யுடன்​தான் சந்​தித்​தேன்’ என, பிர​வீன் சக்​கர​வர்த்தி புதுக் குண்டை வீசி​யுள்​ளார். இது மீண்​டும் திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​ உள்​ளது.

காங்​கிரஸில் ராகுலுக்கு நெருக்​க​மான​வ​ராக அறியப்​படும் பிர​வீன் சக்​கர​வர்த்தி திமுக​வுடன் கூட்​டணி குறித்து தெரி​வித்து வரும் கருத்​துக்​கள் சர்ச்​சையை ஏற்​படுத்தி வரு​கின்​றன. அந்த வகை​யில் ஊடகம் ஒன்​றுக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: சில மாதங்​களுக்கு முன் விஜய்யை தனிப்​பட்ட முறை​யில் நான் சந்​திக்​க​வில்​லை. கட்​சித் தலைமை அனு​ம​தி​யுடன்​தான் சந்​தித்​தேன். கடந்த ஆறு மாதங்​களில் நான் செய்த அனைத்​தும், காங்​கிரஸ் கட்​சித் தலை​மை​யின் அறி​வுரை, ஒப்​புதல் மற்​றும் அனு​ம​தி​யுடன் தான் நடந்​தன.

          

தமி​ழ​கத்​தில் காங்​கிரஸுக்கு தன் பலமே தெரி​யாது. காங்​கிரஸ் புத்​து​யிர் பெற இந்த முறை ஒரு வாய்ப்பை பயன்​படுத்த நினைத்தோம். தமி​ழ​கத்​தில் கட்​சியை வலுப்​படுத்த வேண்​டும். குறிப்​பாக ராகுல் காந்தி மற்​றும் அவரது குடும்​பத்​தினர் தமி​ழ​கத்​தில் நல்ல மதிப்​பைப் பெற்​றுள்​ளனர். இப்​படிப்​பட்ட ஒரு மாநிலத்​தில் ஒரு தேசி​யக் கட்சி தன்னை வலுப்​படுத்​திக் கொள்ள ஏன் கடுமை​யாக உழைக்​கக் கூடாது? அப்​படி​யிருக்​கும்​போது ஒரு காங்​கிரஸ்​ கட்​சித் தொண்​டரோ அல்​லது தலை​வரோ அமைச்​ச​ராகி அதி​காரத்​தைப் பகிர்ந்​து​கொள்ள ஏன் ஆசைப்பட மாட்​டார்? நியாயமில்​லாத எதை​யும் நாங்​கள் கேட்​க​வில்​லை.

காங்​கிரஸுக்கு அதிக சீட் கிடைக்​காத​தால் கட்​சித் தொண்​டர்​கள் அதிர்ச்​சி​யில் உள்​ளனர். அதிக இடங்​கள் கிடைக்​காத பட்​சத்​தில் இந்​தப் பிரச்​சினை​களுக்​குத் தீர்வு இருப்​ப​தாக எனக்​குத் தெரிய​வில்​லை.மேலும் வரும் தேர்​தல் ஒரு கடுமை​யான போட்டி நிறைந்த தேர்​தலாக இருக்​கும். இதில் தவெக ஆளுங்​கட்​சி​யின் வாக்​கு​களைப் பிரிக்​கும் என்​பது உண்​மை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT