தமிழகம்

விமானம் மூலம் முட்டை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை: கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தகவல்

செய்திப்பிரிவு

நாமக்கல்: மத்​திய கிழக்கு ஆசிய நாடு​களில் நில​வும் போர் பதற்​றம் காரண​மாக விமானம் மூலம் முட்டை ஏற்​றுமதி செய்​வதற்​கான நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக நாமக்​கல்​லில் தமிழ்​நாடு கோழிப் பண்​ணை​யாளர்​கள் சங்​கம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சங்​கத்​தின் செய​லா​ளர் சுந்​தர்​ராஜன், முட்டை ஏற்​றுமதி சங்க செய​லா​ளர் வல்​சன் ஆகியோர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ராசிபுரத்​தில் உள்ள கோழிப்​பண்ணை ஒன்​றில் கோடை வெப்​பம் காரண​மாக கோழிகள் அதி​கள​வில் இறந்​தன.

          

மக்​களுக்கு பாதிப்​பா​காத வகை​யில் அவற்றை முறை​யாக அகற்​றம் செய்ய பண்ணை உரிமை​யாள​ருக்கு உரிய அறி​வுறுத்​தல் வழங்கப்​பட்​டுள்​ளது. நாமக்​கல் மண்​டலத்​தில் பறவைக் காய்ச்​சல் பாதிப்பு எது​வும் இல்​லை.

பண்​ணை​களில் 21 நாட்​களுக்கு ஒரு முறை கோழிகளின் ரத்த மாதிரி​கள் எடுக்​கப்​பட்டு ஆய்​வுக்கு அனுப்​பப்​படு​கின்​றன. பறவைக் காய்ச்​சல் பாதிப்​பின்மை காரண​மாக ஏற்​றுமதி நடை​பெறுகிறது.

மத்​திய கிழக்​காசிய நாடு​களில் நில​வும் போர் பதற்​றம் காரண​மாக கப்​பல் போக்​கு​வரத்து குறைந்​துள்​ளது. இதனால் முட்டை ஏற்​றும​தி​யும் குறைந்​துள்​ளது. எனவே கார்கோ விமானம் மூலம் முட்டை ஏற்​றுமதி செய்​வதற்​கான நடவடிக்கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன.

அதேவேளை​யில் கப்​பல்​கள் மூலம் ஓரிரு கன்டெய்​னர்​களில் முட்​டைகள் ஏற்​றுமதி நடை​பெற்று வரு​கிறது. போர் பதற்​றம் தணிந்​தால் முட்டை ஏற்​றுமதிசீராகும். இவ்​வாறு அவர்கள் தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT