தமிழகம்

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: நாளை முதல் காலை 6 மணிக்கு தொடங்கும்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் பூந்​தமல்லி - வடபழனி இடையி​லான மெட்ரோ ரயில் சேவை அக்​.11-ம் தேதி தொடங்​கியது.

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில் பயணி​களின் கோரிக்கை அடிப்​படை​யில், இத்​தடத்​தில் நாளை (அக்​.23) முதல் காலை 6 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்​ளது.

திங்​கள்​கிழமை முதல் சனிக்​கிழமை வரை நெரிசல் மிகுந்த நேரங்​களில் 10 நிமிடங்​களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்​கப்​படும்.

மற்ற நேரத்​தி​லும் ஞாயிற்​றுக்​கிழமை மற்​றும் விடு​முறை நாட்​களி​லும் 15 நிடங்​களுக்கு ஒரு ரயில் இயக்​கப்​படும். வடபழனி, பூந்​தமல்லியில் இருந்து கடைசி ரயில் இரவு 9 மணிக்கு இயக்​கப்​படும் என அறிவிக்கப்பட்டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT