தமிழகம்

பூந்தமல்லி தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கட்சிகள் தீவிரம் - களம் எப்படி?

இரா.நாகராஜன்

பூந்தமல்லி (தனி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என, 11 பேர் களத்தில் உள்ளனர்.

திமுக - ஆ.கிருஷ்ண​சாமி: பூந்​தமல்லி தொகு​தி​யில் திமுக வேட்பாள​ராக 3-வது முறை​யாகக் களம் காணும் ஆ.கிருஷ்ண​சாமியை ஆதரித்​து, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் பிரச்சா​ரம் செய்​துள்​ளனர்.

கடந்த 5 ஆண்​டு​களில் எம்எல்ஏவாக தொகுதி​யில் தான் கொண்​டு​வந்த திரு​மழிசை விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் உள்​ளிட்ட திட்​டப் பணிகள் மற்றும் திமுக தேர்தல் அறிக்​கையை முன்​வைத்து பிரச்சா​ரம் செய்து வரு​கி​றார். மேலும், கிரா​மப்​புறங்​களில் மினி பேருந்து வசதி, வீட்​டுமனைப் பட்​டா, அரசு கலைக்​கல்​லூரி அமைக்க நடவடிக்கை என்பன உள்​ளிட்ட வாக்​குறு​தி​களை​யும் அளித்து வருகி​றார்.

அமமுக - டி.ஏ.ஏழு​மலை: கடந்த 2016 தேர்​தலில் அதி​முக வேட்பாள​ராகப் போட்​டி​யிட்டு வென்ற டி.ஏ.ஏழு​மலை, தற்​போது அதி​முக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் அமமுக வேட்​பாள​ராகப் போட்​டி​யிடு​கி​றார்.

இவரை ஆதரித்​து, அதி​முக பொதுச்​செயலாளர் பழனி​சாமி, அமமுக பொதுச்​செய​லா​ளர் டி.டி.​வி.​தினகரன் உள்​ளிட்​டோர் பிரச்​சா​ரம் செய்​துள்​ளனர். தான் எம்எல்ஏவாக இருந்​த​போது, நிறை​வேற்​றப்​பட்ட திட்​டங்​கள் மற்றும் அமமுக, அதி​முக தேர்​தல் அறிக்​கை​களை முன்​வைத்து வாக்கு சேகரித்து வரு​கி​றார்.

நாம் தமி​ழர் கட்சி - ஜெ.மேகலா: நாதக வேட்​பாளர் ஜெ.மேகலாவை ஆதரித்​து, சீமான் பிரச்​சா​ரம் செய்​துள்​ளார். கிராமப் ​புறங்​களில் நில​வும் குடிநீர் பிரச்​சினை, சீரற்ற மின் விநியோகம், போதிய மருத்​துவ வசதி​யின்​மை, அரசு பள்​ளி​களில் கழிவறை வசதி​யின்மை மற்​றும் பாது​காப்​பின்​மை, வீதி​களில் குவியும் குப்​பை, சாலை​யில் ஓடும் கழிவு நீர் உள்​ளிட்​ட​வற்​றுக்கு முற்றுப் ​புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என வாக்​குறுதி அளித்து பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கி​றார்.

தமிழக வெற்​றிக் கழகம் - ஆர்​.பிர​காசம்: தவெக வேட்​பாள​ரான ஆர்​.பிர​காசம், “இரண்டு திரா​விட கட்​சிகளுக்கு மாற்​றாக உரு​வாகி​யுள்ள தமிழக வெற்​றிக்​கழ​கத்​துக்கு ஒரு வாய்ப்பை வழங்​குங்​கள். ஏழை - எளிய குடும்​பத்​தைச் சேர்ந்த நான், மக்​களின் அடிப்​படைத் தேவை​கள் முழு​மை​யாகப் பூர்த்​தி​யடைய நடவடிக்கை எடுப்​பேன்” என உறு​தி​யளித்​தும், தேர்​தல் வாக்குறுதிகளை முன்​வைத்​தும் வாக்கு சேகரித்து வரு​கி​றார். தேர்தல் பிரச்சா​ரம் இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்ள நிலை​யில், கட்சி​களின் வேட்​பாளர்​கள் களத்​தில் முழு​மூச்​சுடன் இறங்கியுள்ளனர். இதனால் வெற்றி யார் பக்​கம் என்​ப​தில் கடும் போட்டி நிலவுகிறது.

SCROLL FOR NEXT