தமிழகம்

சைவம், வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு: மே 12-ல் ஆஜராக பொன்முடிக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்​கள் குறித்​து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாக தொடரப்​பட்ட வழக்​கில், முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, மே 12-ம் தேதி நேரில் ஆஜராக நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னை​யில், கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்று பேசிய அப்​போதைய அமைச்​சர் பொன்​முடி, சைவ, வைணவ சமயங்​கள் மற்றும் பெண்​கள் குறித்​தும் சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசினார். இதனால், அவர் தனது அமைச்சர் பதவியை இழந்​தார்.

          

இதுதொடர்பாக, சென்னை மாநக​ராட்சி பாஜக கவுன்​சிலர் உமா ஆனந்​தன், சைதாப்​பேட்டை குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்த புகார் மனுவில், பொன்​முடி​யின் வெறுப்பு பேச்சு பெண்​களுக்கு எதி​ராக மட்​டுமின்றி மத உணர்வை புண்​படுத்​தும் வகை​யிலும் இருப்​ப​தால் அவர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும், என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதி​மன்​றத்​தில், நீதிபதி சவுந்​தர​பாண்​டியன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது பொன்​முடி தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர், நீதி​மன்​றம் பிறப்​பித்த சம்​மனை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருப்​ப​தால் ஆஜராக விலக்கு அளிக்க வேண்​டுமென கோரி​னார்.

அதையடுத்து நீதிப​தி, இந்த வழக்கு விசா​ரணையை மே 12-ம் தேதிக்கு தள்​ளி ​வைத்​து, அன்​றைய தினம் பொன்​முடி நேரில் ஆஜராக வேண்​டுமென சம்​மன் பிறப்​பித்து உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT