கடந்த ஆட்சியில் சின்னம்மா தரப்புக்கு சொந்தமான ‘சரக்கு’ கம்பெனிக்கு போட்டியாக, சினிமா தயாரிப்பாளரான ஆந்திர நாராயணனின் மைத்துனர் டாஸ்மாக்குக்கு சரக்கு சப்ளை செய்தாராம்.
மைத்துனரின் 5 கம்பெனிகளிடம் இருந்துதான் பெருவாரியான ‘உற்சாக பானங்களை’ பர்ச்சேஸ் செய்ததாம் தமிழக அரசு. அந்த ‘நாராயணன்’ இப்போதைய முதல்வருக்கு பக்கத்திலேயே ‘உரிமையோடு’ உட்கார்ந்து இருக்கிறாராம். இதனால், ஆந்திர சரக்கு சப்ளை முன்னைவிட அமோகமாய் இருக்கும் என்கிறார்கள்.
இதேபோல, முதல்வருக்கு உற்ற நண்பராய் இருக்கும் ஆந்திரத்தின் இன்னொரு ரெட்டியானவரும் மதுரையின் மூன்றெழுத்து ‘கிரானைட்’ அதிபரும் நகமும், சதையுமாக இருப்பவர்களாம். முருகக் கடவுளின் பெயர் கொண்ட கிரானைட் அதிபரின் தம்பி கிழித்த கோட்டை தாண்ட மாட்டாராம் ரெட்டி.
இந்த உறவுகளை நினைவூட்டும் கிரானைட் புள்ளிகள், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் அதிரடி நடவடிக்கையால் மதுரை மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட அந்த கிரானைட் அதிபரின் ஆட்டம், ‘அரசுக்கு வருமானம்’ என்ற கணக்கில் மீண்டும் துளிர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதாகச் சொல்கிறார்கள்.