தமிழகம்

“தமிழக மக்கள் எல்லா வளமும் நலமும் பெறவேண்டும்” - அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: ‘பொங்கல் திரு​நாளில் மக்​கள் அனை​வரும் சீரோடும், சிறப்போடும் வாழ வேண்​டும்’ என அரசி​யல் கட்​சித் தலை​வர்கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தமிழர் திரு​நாளாம் பொங்கல் திரு​நாளில், தமிழக மக்​கள் அனை​வரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்​போடும் வாழ வேண்​டும் என்று எல்​லாம் வல்ல இறைவனை பிரார்த்​திக்கிறேன்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: தை பிறந்​தாள் வழி பிறக்​கும் என தன்​னம்​பிக்கை தரும் தைத் திரு​நாளில் எதிர்​வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மதவாத, சாதி வெறி, சமூக விரோத பிற்​போக்கு சக்​தி​களை முற்​றாக நிராகரித்​து, மதச்​சார்​பற்ற முற்​போக்கு கருத்​துகளுக்கு வலு​வூட்டி மகத்​தான வெற்​றி​பெற உறுதி ஏற்​போம்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: உலகம் முழு​வதும் உள்ள தமிழர்​கள் பொங்கல் விழாவை மகிழ்ச்​சி​யுடன் கொண்​டாடி, வாழ்​வில் முன்​னேற வாழ்த்​துகள். தமிழகத்​தில் போதைப்​பொருட்​கள் இல்லாமல் வன்​முறைச் சம்​பவங்​கள் நடை​பெறாமல் அனை​வருக்​கும் அச்​சமில்​லாத பாது​காப்​பான வாழ்க்கை அமைய தைத் திருநாள் பிறக்​கட்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன்: திருவள்​ளுவரின் வாக்​குக்கு ஏற்ப, உலகத் தொழில் அனைத்​துக்​கும் அச்​சாணி​யாகத் திகழும் உழவுத் தொழிலை​யும், அதில் தன்னை ஈடு​படுத்​திக் கொண்​டிருக்​கும் உழவர் பெரு​மக்​களின் நலனை​யும் பேணிக்​ காத்​திட நாம் அனை​வரும் இந்​நாளில் உறு​தி​யேற் போம்.

நாம் தமிழர் கட்சி ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: தித்திக்​கும் செங்​கரும்​புடன் சின்​னஞ்​சிறார் சிரிப்​பொலி​யும், புத்தாடை தான் உடுத்தி புதுப்​பொலிவு காட்​டிடும் இளம்​ வஞ்​சி​யர் வளை​யொலி​யும் தெரு​வெங்​கும் எதிரொலிக்க, உலகெங்​கும் பரவி வாழும் தமிழ்ச்​சொந்​தங்​கள் அனை​வருக்​கும் தைப்​பொங்கல் தமிழர் திரு​நாள் நல்​வாழ்த்​துகள். தைத்​திங்​கள் முதல் நாளாம், தமிழ்ப்​புத்​தாண்​டில் பொங்​கட்​டும் புரட்​சிகரமான தமிழ்ப்பொங்கல்.

வி.கே.சசிகலா: தமிழரின் தன்​மானம் தனித் தன்​மையோடு திகழ, தமிழர்​தம் வாழ்​வில் வளம் பெற்​றிட, மக்​களாட்சி மலர, தமிழர் திரு​நாளாம் தைத் திரு​நாள் வழி​வகுக்க வேண்​டும் என்று தெரி​வித்​து, உங்​கள் அனை​வரது இல்​லங்​களி​லும் அன்​பும், அமை​தி​யும், செல்​வ​மும், மகிழ்​வும் பால்​போல் பொங்கி வழிய வாழ்த்​துகிறேன். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர். இதேபோல் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் சமூக நல அமைப்புகளும் வாழ்த்து தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT