தமிழகம்

தேர்தல் பிரச்சார பாடல்கள்: தெறிக்கவிடும் கட்சிகள்

பி.ஜோசப் ஜெரால்டு

தமி​ழர்​களை​யும் இசையை​யும் பிரிக்க முடி​யாது. சுதந்​திர போராட்​டம் முதற்​கொண்டு வீரத்தை ஊட்​ட​வும், எழுச்​சியை உரு​வாக்​க​வும் பாடல்​கள் பாடப்​பட்​டன. அந்​தவகை​யில், தேர்​தல் காலத்​தில் வாக்​காளர்​களை ஈர்க்​கும் முக்​கிய கரு​வி​யாக தேர்​தல் பிரச்​சார பாடல்​கள் இருக்​கின்​றன.

இந்த பாடல்​களை உரு​வாக்க பல்​வேறு கட்​சிகளும் தனி​யாக ஒரு குழு​வையே உரு​வாக்​கி, பெரும் செல​வில் பாடல்​களை வடிவ​மைக்​கின்​ற​னர். அதில், தங்​கள் கட்​சி​யின் கொள்​கை​கள், மக்​கள் நல திட்​டங்​கள், தலை​வர்​கள் குறித்த கருத்​தை, மக்​கள் விரும்​பும் எளிய இசை​யில் உரு​வாக்​கு​கின்​ற​னர். அதன்​படி, திமுக, அதி​முக, நாம் தமி​ழர், தவெக உள்​ளிட்ட பல்​வேறு கட்​சிகள் தங்​களுக்​கென்று தனித்​தனி​யாக பாடல்​களை வெளி​யிட்​டு, தேர்​தல் நேரத்​தில் பிரச்​சா​ரங்​கள், பொதுக் கூட்​டங்​கள், தங்​கள் கட்சி யூடியூப் போன்ற சமூக வலை​தளங்​களில் வைரலாக்கி வரு​கின்​ற​னர்.

          

திமுக சார்​பில் கடந்த தேர்​தலின்​போது, ‘ஸ்​டா​லின்​தான் வராரு.. விடியல் தர போறாரு..’ என்ற பிரச்​சார பாடல் பட்​டிதொட்டி எங்​கும் பரவி வரவேற்பை பெற்​றது. இந்த முறை ‘ஸ்​டா​லின் தொடரட்​டும்.. தமிழ்​நாடு வெல்​லட்​டும்’ என்ற ராப் இசை கலந்த பாடலை திமுக வெளி​யிட்​டுள்​ளது. ‘ஸ்​டா​லின் தான் வராரு...’ பாடல் அளவுக்கு இன்​னும் இந்​தப் பாடல் பிரபல​மா​காத நிலை​யில், அந்த பாடலை சமூக வலை​தளங்​களில் ‘பெய்டு புரோமோஷ​னாக’ செய்​யும் முயற்​சி​யில் திமுக ஐ.டி விங் நிர்​வாகி​கள் தீவிரம் காட்டி வரு​கின்​ற​னர்.

அதி​முக பிரச்​சா​ரங்​களில் எம்​ஜிஆர் நடித்த படங்​களின் பாடல்​கள், ஜெயலலிதா பாடல்​கள், இரட்டை இலை சின்​னம் குறித்த பாடல்​கள் ஒலிக்​க​விடப்​படு​கின்​றன. அத்​துடன் இந்த தேர்​தலுக்​காக ‘விடி​யாத ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்ப விரைந்து வரு​கி​றார் எடப்​பாடி​யார்​..’ என்ற பாடலை​யும், திமுக நிறை​வேற்​றாத வாக்​குறு​தி​களை குறிப்​பிட்டு ‘காது குத்​து...’ என்ற பாடலை​யும் அதி​முக ஐ.டி விங் நிர்​வாகி​கள் ட்ரெண்​டாக்கி வரு​கின்​ற​னர்.

தமி​ழர் அடை​யாளம், உரிமை, மொழி, நிலம், இனம் என உணர்ச்​சிமிக்க வரி​களு​டன் நாம் தமி​ழர் கட்​சி​யும் பிரச்​சார பாடலை வெளி​யிட்​டுள்​ளது. ‘என்​னம்மா தேவி ஜக்​கம்​மா.. நாடு நாசமா போகுதே நியாய​மா’ என தனது பங்​குக்கு தொண்​டர்​களை உசுப்​பேற்றி வரு​கி​றார்​கள் அந்த கட்​சி​யின் தம்​பிகள்.

தவெக தரப்​பிலோ ‘தமி​ழன் கொடி பறக்​குது.. தலை​வன் யுகம் பிறக்​குது’ கொடி பாடலை​யும், ‘உங்க விஜய் நான் வரேன்​..’ என அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடலை​யும் ட்ரெண்ட் ஆக்​கி​னார்​கள் தவெக சமூக வலை​தளக் குழு​வினர். மேலும், கல்​லூரி நிகழ்ச்​சி, திரு​விழா என தவெக கட்சி பாடல்​களை இளம் பட்​டாளம் கொண்​டாடி வரு​கிறது.

இதுத​விர தேமு​தி​க​வினர் விஜய்​காந்த் பாடல்​களை​யும், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் நாட்​டுப்​புற பாடல்​களை மக்​கள் பிரச்​சினை கருத்​துகளை புகுத்​தி, தங்​கள் பாணி​யில் தயா​ரித்த பாடல்​களை​யும் பிரச்​சார களத்​தில் பயன்​படுத்​துகின்​ற​னர்.

தமி​ழ​கத்​தில் காலங்​கால​மாக தேர்​தலில் வெற்​றி​பெற வாக்கு சேகரிப்​பு, பிரச்​சா​ரம், மக்​கள் சந்​திப்பு எப்​படியோ, அது​போல கட்​சி​களின் பாடல்​கள் என்​பது தேர்​தலில் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் கரு​வி​யாக உள்​ளது நிதர்​சனம்.

SCROLL FOR NEXT