திமுக கூட்டணியில் தொகுதி குறைப்பு: ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என மதிமுக மாவட்டச் செயலாளர் ஆதங்கம்

திமுக கூட்டணியில் தொகுதி குறைப்பு: ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என மதிமுக மாவட்டச் செயலாளர் ஆதங்கம்
Updated on
1 min read

​தி​முக கூட்​ட​ணி​யில் மதி​முக​வுக்கு விசிக, கம்​யூனிஸ்ட் கட்​சிகளை விட குறை​வான தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளதற்​கு, ‘நெஞ்சு பொறுக்​கு​தில்​லை​யே’ என மதி​முக மாவட்​டச் செய​லா​ளர் ஒரு​வர் முகநூலில் தனது ஆதங்​கத்தை வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் விசிக​வுக்கு 8, இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கட்​சிகளுக்கு தலா 5 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மதி​முக​வுக்கு 4 தொகு​தி​கள் மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. அதி​லும், 3 தொகு​தி​களில் உதயசூரியன் சின்​னத்​தி​லும், ஒரு தொகு​தி​யில் சொந்த சின்​னத்​தி​லும் போட்​டி​யிட உள்​ளது. கடந்த முறையை விட 2 தொகு​தி​கள் குறைக்​கப்​பட்​டுள்​ள​தால் அக்​கட்​சி​யினர் கடும் அதிர்ச்​சி​யடைந்​தனர்.

இது தொடர்​பாக மதி​முக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செய​லா​ளர் மணவை தமிழ்​மாணிக்​கம் தனது முகநூல் பக்​கத்​தில், திமுக கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகளுக்கு ஒதுக்​கப்பட்ட இடங்களை பட்​டியலிட்​டு, ‘நெஞ்சு பொறுக்​கு​தில்​லை​யே...’ எனக் குறிப்​பிட்டு தனது ஆதங்​கத்தை வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறும்​போது, “தொகு​திப் பங்​கீடு பட்​டியல் வரிசை​யில் மதி​முக பின்​தங்​கி​யிருப்​பதை பார்த்து ஏற்​பட்ட உணர்ச்சி குமுறல் பதிவு. இதற்​காக நாங்​கள் தேர்​தல் பணி​யில் பின்​தங்க மாட்​டோம். கட்​சித் தலை​மை​யின் உத்​தர​வுக்கு கட்​டுப்​பட்​டு, தோழமைக் கட்​சி​களின் வெற்​றிக்கு பாடு​படு​வோம்” என்​றார்.

அவரது முகநூல் பதிவுக்​கு, “இதற்கு தேர்​தல் புறக்​கணிப்பே மேல்; நம்மை அழிக்​கும் ஒரே இயக்​கம் திமுக; பதவி ஆசை பிடித்த இரண்​டாம் கட்ட தலை​கள் மட்​டுமே இந்த நிலைக்கு காரணம்; கூட்​ட​ணியி​லிருந்து வெளி​யேற வேண்​டும்” என பலரும் பின்​னூட்​டத்​தில் கருத்து தெரி​வித்து வரு​கின்​றனர்​.

திமுக கூட்டணியில் தொகுதி குறைப்பு: ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என மதிமுக மாவட்டச் செயலாளர் ஆதங்கம்
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு; தாமரை சின்னத்தில் போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in