தமிழகம்

“தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” - நாங்குநேரி சம்பவத்தை குறிப்பிட்டு தலைவர்கள் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: நாங்குநேரி இரட்டை கொலைச் சம்​பவம், தமிழகத்​தில் சட்​டம் - ஒழுங்கை வெளிச்​சம் போட்டுக் காட்​டு​வ​தாக அரசி​யல் கட்​சித் தலைவர்கள் குற்​றம்சாட்​டி​உள்ளனர்.

மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: நாங்குநேரியில் மர்ம கும்​பல் நடத்​திய தாக்​குதலில் இரு​வர் உயி​ரிழந்​திருப்​பதும், 5 பேர் படு​கா​யம் அடைந் திருப்​பதும் அதிர்ச்​சி​யளிக்​கிறது. தமிழகத்​தில் சட்​டம் - ஒழுங்கு எந்த அளவு சீர்​குலைந்​துள்​ளது என்​பதை இச்​சம்​பவமே வெளிச்​சம் போட்டுக் காட்​டு​கிறது.

          

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: நாங்குநேரி காட்​சிகளை காணவே பதைக்​கின்​றன. திமுக ஆட்​சி​யில் பாலாறும், தேனாறும் ஓடு​வது போல விளம்​பரம் செய்​கின்​றனர். ஆனால், உண்​மை​யில் ரத்த ஆறு​தான்ஓடு​கிறது. பாது​காப்பு உணர்வை மக்​களிடையே உறுதி செய்ய முடி​யாத இந்த அரசு இருந்து என்ன பயன். சமூக மோதல்​களை தடுக்க முடி​யாத திமுக அரசுக்கு எனது கடும் கண்​டனத்தை தெரிவிக்கிறேன்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: தமிழகத்​தில் கடந்த 5 ஆண்​டு​களாக கஞ்சா புழக்​கம் அதி​கரித்​து, இளைஞர்​களின் வாழ்வை சீரழிப்​ப​தோடு, பொது​மக்​களின் பாது​காப்​பை​யும் சிதைத்​து, திறனற்ற நிர்​வாகத்​தால் எங்கு பார்த்​தா​லும் கஞ்சா மயமாக்​கி, தமிழகத்​தின் சட்​டம் ஒழுங்​கை​யும், மக்​கள் நலனை​யும் ஒருசேர கொன்​று​விட்​டு, ‘வெல்​வோம் ஒன்​றாக’ என்று திமுக அரசு சூளுரைப்​பது வெட்​கக்​கே​டானது.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: நாங்குநேரி அருகே நடை​பெற்றுள்ள கொடூர​மான இரட்டைக் கொலை சம்​பவம் அதிர்ச்​சி​யளிக்​கிறது. இச்​சம்​பவத்தை கடுமை​யாக கண்​டிக்​கிறேன். இனி வரும் காலங்​களில் காவல்​துறை மிகுந்த விழிப்​புணர்​வுடன் பணி​யாற்ற வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: தமிழகத்​தின் அனைத்து கிராமங்​களி​லும் கஞ்சா தடை​யின்றி கிடைப்​பது தான் இத்​தகைய கொலை​வெறி தாக்​குதல்​கள் நடப்​ப​தற்கு காரணம். இதற்​காக திமுக அரசு வெட்கித்தலைகுனிய வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: தென் மாவட்​டங்​களில் சாதியின் பெயரில் வன்முறையை தூண்டிவிட்டு அரசி​யல் ஆதா​யம் தேட சிலர் முயற்​சிக்​கின்​றனர். அதன் ஒத்​தி​கையே இந்த செயல் எனத் தோன்​றுகிறது. இதன் பின்​னணியை முழுமையாக ஆய்ந்​தரிய வேண்​டும். இதில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் யாராக இருந்​தா​லும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: தமிழகத்​தில் நாளுக்கு நாள் குற்​றச்​சம்​பவங்​கள் தொடர்​வது மக்​களுக்கு பாது​காப்​பற்ற தன்​மையை வெளிப்​படுத்​துகிறது. தமிழக அரசு இந்த கொலைச்​சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை கைது செய்து உரிய தண்​டனையை காலம் தாழ்த்​தாமல் கொடுக்க வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: போதைப் பொருட்​களின் நடமாட்​டத்தை கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுக்​காத திமுக அரசு, அதை திசை திருப்​பும் நோக்​கில் உதவித்​தொகை கொடுத்து மக்​களை சரிகட்ட நினைக்​கிறது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: தமிழகத்​தில் கட்​டுக்​கடங்​காது நடை​பெறும் போதைப்​பொருட்​கள் விற்​பனையும், அதனால் நடக்கும் கொலைகள், பாலியல் வன்கொடுமை​களை தடுக்​கவும் நடவடிக்கை எடுக்​காத திமுக அரசின் அலட்​சி​யத்​தால் இன்​னும் எத்​தனை உயிர்​கள் பலி கொள்​ளப்​போகிறதோ?

தவெக தலை​வர் விஜய்: உலக நாடு​களு​டன் போட்டி போடும் ஓர் ஆட்​சி​யில் பொது​மக்​களின் உயிருக்கு உத்​தர​வாதம் எங்​கே, நம்​பர்-1 மாநிலத்​தின் சட்​டம்- ஒழுங்கு லட்​சணம் இது​தா​னா, மக்​களின் பாது​காப்பை துளி​யும் யோசிக்​காத திமுக ஆட்சி தூக்கி எறியப்​படுவது உறுதி.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: நாங்குநேரில் நடந்த சம்​பவத்​துக்​கு, கஞ்சா போதை​யால் ஏற்​பட்ட ஆவேசம்​தான் காரண​மாக இருக்க முடி​யும். தடை​யின்றி கஞ்சா கிடைப்​பதை தடுக்க இயலாத இந்த அரசு அனைத்​துத் தரப்பு மக்​களை​யும் ஏமாற்றி தேர்​தலில் வெற்​றி​பெற, மறை​முக​மாக வாக்​குக்கு பணம்கொடுத்து வரு​வது கண்​டிக்​கதக்​கது. இதே​போல் புதிய தமிழகம் கட்சித் தலை​வர் கிருஷ்ணசாமி உள்​ளிட்​டோரும் கண்டனம் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT