‘சிறுத்தை’ கட்சியில் இந்த முறை புதியவர்கள் நான்கு பேருக்காவது சீட் கொடுக்க வேண்டும் என உள்ளுக்குள்ளேயே கடமுடாச் சத்தம் கேட்கிறதாம். சிட்டிங் எம்எல்ஏ-க்களில் ’சிந்தனை’ தலைவரை தவிர மற்றவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் எனவும் சிலர் போர்முரசம் கொட்டுகிறார்களாம்.
ஆனால், சிட்டிங் நபர்களை விட்டால் மக்களுக்குப் பரிச்சயமான முகங்கள் வேறு யார் இருக்கிறார்... அப்படியே புதியவர்களுக்கு கொடுத்தாலும் செலவு செய்ய ‘பசை’ யாரிடம் இருக்கிறது என மலைக்கிறாராம் கட்சியின் தலைவர்.
இதனிடையே, இந்த முறை தனக்கு சீட் கிடைப்பது இவரால் கெட்டுவிடுமோ என முன்கூட்டியே யோசித்து காரியமாற்றிய ஒரு தலைவர், அந்த ‘சிங்’கத்தை சில மாதங்களுக்கு முன்பே ‘ஹனி டிராப்’ சிகிச்சை ஒன்றில் சிக்கவைத்து கச்சிதமாய் கணக்கை முடித்துவிட்டாராம்.
இதேபோல் பக்கத்து மாநிலத்தில் ஒரு பொதுத் தொகுதி உள்பட 3 சீட்கள் கேட்கும் சிறுத்தை தலைவர், பொதுத் தொகுதியில் பார்க்கவ குல பெண்மணி ஒருவருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கிறாராம்.