தமிழகம்

சூரிய கட்சிக்காக ‘தூவல்’ கம்பெனி புது வியூகம் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

கட்சிக்கு சம்பந்தமில்லாத, கட்சியினர் சம்பந்தப்படாத யூடியூப் சேனல்களை பக்காவாக வளைத்து வைத்திருக்கிறது சூரியக் கட்சிக்காக சூத்திரம் வகுத்துக் கொடுக்கும் மாப்பிள்ளை சாரின் ‘தூவல்’ கம்பெனி. மக்கள் மத்தியில் கட்சிச் சாயம் தெரியாமல் பரப்ப வேண்டிய செய்திகளை இந்த சேனல்கள் மூலம் தான் தந்திரமாகப் பரப்புகிறார்கள்.

சேனல்களின் சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கைக்கு ஏற்ப இவர்களுக்கு தாராள ‘பேட்டா’ தரப்படுகிறது. தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் தாங்கள் நினைத்ததை சாதிக்க கதர் பார்ட்டிகள் பனையூர் ரூட்டையும் தயார்படுத்தியே வைத்திருக்கிறார்கள்.

          

அப்படி ஒருவேளை அவர்கள் பனையூர் பக்கம் பாய்ந்தால், “சூரியக் கட்சி தலைவர் தானே இண்டியா கூட்டணிக்கு டெல்லி சின்னவரை தலைமை ஏற்க அழைத்தார். இப்போது, சூரியக் கட்சிக்கே சூனியம் வைக்கும் விதமாக டெல்லி சின்னவர் விசில் பார்ட்டியுடன் கைகோத்துவிட்டார்.

இண்டியா கூட்டணியில் இருக்கும் ஒரு பிரதானக் தலைவரின் கட்சிக்கு நெருக்கடியை உண்டாக்கிவிட்டு இன்னமும் அந்தக் கூட்டணிக்கு டெல்லி சின்னவர் எப்படி தலைமை ஏற்கமுடியும்?” என்று பரபர கேள்வியை எழுப்பும் விதமாக ‘தூவல்’ கம்பெனியார், இப்போதே கன்டென்ட் களை தயாரித்து வைத்துவிட்டார்களாம். கதர் பார்ட்டிகள் ‘அணி மாறிய’ அடுத்த நிமிடமே ’வாடகை’ சேனல்களில் இந்த விவாதங்கள் களைகட்டும் என எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT