‘பங்கு வேண்டும்’ என படைதிரட்டும் கட்சியின் ‘வெல்த்தான’ மாநில முக்கியஸ்தரும் அந்தக் கட்சியின் தேசிய முக்கியஸ்தரும் ஒரே சமூகத்தினர் என்பதால் பலரும் பல சந்தேகங்களைக் கிளப்புகிறார் களாம்.
சூரியக் கட்சி தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் ‘வெல்த்’ பார்ட்டி, இந்தக் கூட்டணி தொடர்ந்தால் தான் நமக்கு பல விதத்திலும் நல்லது என நினைக்கிறாராம். ஆனால், சூரியக் கட்சி செல்வாக்கை வைத்து ‘வெல்த்’ பார்ட்டி தனது வெல்த்தை பெருக்கிக் கொள்வது சொந்தக் கட்சிக்குள் பலரது கண்களை உறுத்துகிறதாம்.
அதனால், பலரும் பலவிதமாக ‘வெல்த்’ பார்ட்டிக்கு எதிராக தலைமைக்கு வெடிகளை தட்டிவிடுகிறார்களாம். இருந்த போதும் ‘வெல்த்’ பார்ட்டி மீது ஒரு விசாரணை கூட இல்லையே என ஆதங்கப்படுபவர்கள், டெல்லியில உட்கார்ந்திருப்பதும் அவங்காளு தானே... அதுதான் எல்லாத்தையும் ’சமாளிச்சுடுறாங்க’ என்று அங்கலாய்க்கிறார்களாம்.
இப்படியான பேச்சுகள் எழுவதை விரும்பாத டெல்லி முக்கியஸ்தர், “இனிமேல் சூரியக் கட்சிக்கு ஆதரவாகவோ, கூட்டணி சம்பந்தமாகவோ எதுவும் பேசாதீர்கள். அனைத்தையும் ‘பொறுப்பாளர்’ பார்த்துப்பார்” என்று ‘வெல்த்’ பார்ட்டிக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறாராம்.