தமிழகம்

மலர் கட்சி முக்கியத் தலைவர் மகனின் ‘வசூல்’ மேளா | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

மலர் கட்சியின் முக்கியத் தலைவரின் மகன், ‘சீட்டுக்கு நோட்டு’ வசூலிக்கும் வேலையில் தீவிரமாகி இருக்கிறாராம். தலைநகரில் ரயில்வே ஸ்டேஷன் பக்கமாய் இருக்கும் அந்த ‘நீல’ ஓட்டலில் அறை எடுத்துக் கொண்டு, மக்கள் பிரதிநிதிகளாகத் துடிக்கும் மலர் கட்சி மக்களை அங்கு வரவைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறாராம் ‘லட்டுக்’ கடவுளின் பெயர் கொண்ட அந்த வாரிசு. யாரெல்லாம் ‘சரிப்பட்டு’ வருகிறார்களோ அவர்களிடம் இருந்து கணிசமான தொகையை டோக்கன் அட்வான்ஸாக வாங்கிக் கொள்கிறோம்.

சீட் உறுதியானதும் மீதியை செட்டில் செய்யவேண்டும். சீட் கிடைக்காவிட்டால் பணம் திருப்பித் தரப்படும் என்பது ஒப்பந்தமாம்.

தலைவரின் மகன் இப்படி ‘தனிப்பட்ட முறையில்’ வசூல் மேளா நடத்துவதை ஸ்மெல் பண்ணிவிட்ட ‘மவுன்ட்’ தலைவர் விஷயத்தை மீடியாவில் லீக் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்கிறாராம்.

இதேபோல், ‘செய்தி சொல்லும்’ இடத்தில் இருக்கும் புள்ளி ஒருவர், மலர் கட்சியின் மகிளா மோர்ச்சா முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் இருவரிடம் ‘ஏடாகூட வசனம்’ பேசிய ஆடியோவையும் ‘மவுன்ட்’ தலைவர் தரப்பின் வார் ரூம் தம்பிகள் ரெக்கார்ட் பண்ணி வைத்திருக்கிறார்களாம். ‘ஜன நாயகன்’ ரிலீஸ் இப்போதைக்கு இல்லை என்றாலும் எந்த நேரத்திலும் இந்த ஆடியோ ரிலீஸ் ஆகலாம் என்கிறார்கள்.

SCROLL FOR NEXT