வடநாட்டு ‘தானி’ கம்பெனியரால் சூரியக் கட்சி ஆட்சியில் தமிழகத்துக்குள் எதிலும் எதிர்பார்த்த அளவுக்கு கோலோச்ச முடியவில்லையாம். இதையடுத்து, இந்தத் தேர்தலில், இலைக் கட்சிக்கு தாராளமாக ‘கஜானாவை’ திறந்துவிட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறதாம் ‘தானி’ கம்பெனி.
அந்த டீல் பிடித்துப் போனதால் தான் “நூற்றுக்கு 250 சதவீதம் நாங்கள் தான் ஜெயிப்போம்” என்று மார்தட்டுகிறாராம் எடக்கான தலைவர். இலைக்கட்சி அதிகாரத்தில் இருந்த போது, ‘தானி’ கம்பெனிக்கு தமிழகத்துக்குள் முக்கிய திட்டங்களில் முன்னுரிமை கொடுத்தது. ‘தானி’ கம்பெனியார் காவிக் கட்சி தலைமைக்கும் கணிசமாக ‘கரிசனம்’ காட்டுபவர்கள் என்பதால் இலைக் கட்சியினரும் அச்சமின்றி அவர்களோடு நெருக்கம் பாராட்டினார்கள்.
அப்போதிருந்த அமைச்சர்களின் வாரிசுகள் சிலர், தனிப்பட்ட முறையிலும் ‘தானி’ கம்பெனியோடு டீல் போட்டுக் கொண்டு பிசினஸிலும் கோலோச்சினார்கள். இன்னமும் இந்த பிசினஸ் டீல் பிசிறின்றி தொடர்வதால் பெருத்த நம்பிக்கையுடன் இலைக் கட்சியுடன் அடுத்த டீலுக்கு அச்சாரம் போட்டிருக்கிறதாம் ‘தானி’ கம்பெனி.