தமிழகம்

முதன்​மை​யானவரின் ரகசிய சந்திப்புகள் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

முதன்​மை​யானவரின் அண்டை தேச பயணத்​தின்​போது அங்கே சில பல ரகசி​யச் சந்​திப்​பு​களை​யும் நிகழ்த்​தி​னா​ராம். அதில் முக்​கிய​மானவர், இப்​போது தனி இயக்​கம் நடத்​தும் தாமரைக் கட்​சி​யின் முன்​னாள் முக்​கிய நிர்​வாகி​யாம். சுமார் ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக நடந்த இந்​தச் சந்​திப்​பில், தமிழக அரசி​யல் நில​வரம் குறித்து இரு​வரும் தீவிர​மாக விவா​தித்​தார்​களாம்.

ஆட்சி அமைப்​ப​தில் சிக்​கலான சூழல் ஏற்​பட்​ட​போது முன்​னாள் தாமரைக் கட்சி நிர்​வாகி​யும் தன்​னால் முடிந்த சில லீடு​களை முதன்​மை​யானவருக்கு எடுத்​துக் கொடுத்​தா​ராம். அதற்கு நன்றி தெரி​வித்​தவர், தொடர்ந்து தனக்கு பக்​கபல​மாக இருக்க வேண்​டும் எனக் கேட்​டுக் கொண்​டா​ராம்.

அரசுடன் தொழில் முதலீட்டு ஒப்​பந்​தம் போட்​டிருக்​கும் நிறு​வனங்​களில் ஒன்று முன்​னாள் தாமரைக் கட்சி நிர்​வாகி​யின் சிபாரிசிலேயே உள்​ளுக்​குள் வந்​த​தாக​வும் ஒரு கொசுறுத் தகவல்​ சொல்​கிறார்​கள்​.

SCROLL FOR NEXT