தமிழகம்

‘ஜெய’ பிர​முகரின் முன்ஜாக்​கிரதை நகர்வுகள் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

இடைத்​தேர்​தல் தொகு​தி​களில் விசில் வேட்​பாளர்​கள் எதிர்​கொள்​ளும் பிர​தான கேள்வி​யே, “எவ்​வளவு வாங்​கிட்டு கட்சி மாறுனீங்​க?” என்​ப​தாகத்​தான் இருக்​கிறது. வேட்​பாளர்​கள், தலை​யில் அடித்து சத்​தி​யம் செய்​தா​லும் அவர்​கள் சொல்​வதை யாரும் நம்​புவ​தாக இல்​லை.

இந்த நிலை​யில், அடுத்த ரவுண்​டில் இடைத்​தேர்​தலை எதிர்​பார்த்து இருக்​கும் ‘துறை​யான’ தொகு​தி​யில் போட்​டி​யிடத் தயா​ராகி வரும் ‘ஜெய’ பிர​முக​ரானவர் முன்​ஜாக்​கிரதை முத்​தண்​ணா​வாக இப்​போதே அலெர்ட் ஆகி வரு​கிறா​ராம். தேர்​தல் அறி​வித்த பிறகு தொகு​திக்​குள் போய் ஏடாகூட​மாக சிக்​கிச் சின்​னாபின்​ன​மாகி​விடக் கூடாது என்​ப​தற்​காக, இப்​போதே தினம் ஒரு பகு​தி​யாக தொகுதி வலம் போகிறா​ராம்.

போகும் இடமெல்​லாம், தொகு​திக்​குள் தன்​னால் கொண்​டு​வரப்​பட்ட திட்​டங்​களை மக்​களிடம் பட்​டியல் போடும் அவர், “அடுத்து நான் வந்​தால் இதையெல்​லாம் கண்​டிப்பா செய்து கொடுப்​பேன்” என்று வாக்​குறு​தி​களை​யும் எடுத்து வீசுகிறா​ராம். அப்​படி​யும் சிலர், “ஆமா.. எதுக்கு நீங்க கட்சி மாறுனீங்​க?” என்று கொக்கி போடு​கிறார்​களாம். அவர்​களை தந்​திர​மாகச் சமா​தானப்​படுத்​தும் ‘ஜெய’ பிர​முகர், “இப்​ப... நான் உங்​களுக்கு பல வாக்​குறு​தி​களைக் கொடுக்​கிறேன்.

இலைக் கட்​சி​யில எம்​எல்​ஏவா இருந்தா இதையெல்​லாம் நிறைவேற்ற முடி​யு​மா? அதனால​தான் ஆளுங்​கட்​சிக்கு மாறவேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுப் போச்​சு. ஆக, நான் கட்சி மாறுனது எனக்​காக இல்​லை; தொகுதி மக்களுக்கு நான் கொடுத்த வாக்​குறு​தி​களை நிறைவேற்​றத்​தான்னு புரிஞ்​சுக்​குங்க” என்​று சப்​பைக் ​கட்​டு கட்​டி வருகிறா​ராம்​.

SCROLL FOR NEXT