கதர் கட்​சி​யின் ‘தேசி​யத் தலைமை’ சலசலப்பு | உள்குத்து உளவாளி

கதர் கட்​சி​யின் ‘தேசி​யத் தலைமை’ சலசலப்பு | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

கதர் கட்​சி​யின் தேசி​யத் தலை​மைக்கு விரை​வில் தேர்​தல் அறிவிக்​கப் போகிறார்​களாம். கடந்த முறை பெரிய​வரை கோதா​வில் இறக்​கி​விட்​டது தலை​மைக் குடும்​பம். அவரை எதிர்த்​து, அடிக்​கடி சர்ச்​சைக்​குள் சிக்​கிக் கொள்​ளும் மலபார் தேசத்து எம்​.பி. படை திரட்​டி​னார். அவருக்கு ஆதர​வாக தமிழகத்​தில் வாரிசு எம்​.பி. ஒரு​வர் வரிந்து கட்​டி​னார். அது​தான் கதர் கட்சி ஜனநாயகம் என்று சொன்​னார்​கள்; கேட்க நன்​றாக இருந்​தது.

ஆனால் தேர்​தலில், தலை​மைக் குடும்​பம் நிறுத்​திய பெரிய​வர் வெற்றி பெற்​றதற்​காக சொந்​தத் தொகு​தி​யில் இனிப்பு வழங்​கிய ‘தீரர்’ பெயர் கொண்ட மாவட்​டத் தலை​வரை கர்​வம் கட்டி பதவி​யில் இருந்து தூக்​கி​விட்​டார் வாரிசு எம்​.பி. இந்த நிலை​யில், இப்​போது பெரிய​வருக்​குப் பதிலாக தலை​மைக் குடும்​பத்​தின் பெண் வாரிசை தலை​வர் பதவிக்கு பரிந்​துரைக்​கும் திட்​டத்​தில் இருக்​கிறார்​களாம்.

வழக்​கம்​போல மலபார் தேசத்து எம்​.பி.​யும், வாரிசு எம்​.பி.​யும் சேர்ந்து போட்டி வேட்​பாளரை நிறுத்த இப்​போதே ஆயத்​த​மாகி வரு​கிறார்​களாம். இம்​முறை​யும் மலபார் மனிதரே கோதா​வில் குதிக்​கலாம் என்​கிறார்​கள்.

இந்த நிலை​யில், அண்​மை​யில் வாரிசு எம்​.பி.​யுடன் நான்கு நாட்​கள், சீமைப் பக்​கம் உள்ள அவரது தோட்​டத்து பங்​களா​வுக்கே வந்து தங்கி இருந்​தா​ராம் மலபார் தலை. தோட்​டத்து வீட்​டில், நட்​சத்​திரப்​படி தனது தந்​தை​யாரின் பிறந்த நாளை கொண்​டாடிய வாரிசு எம்​.பி.பங்​களா வாசலில் இருக்​கும், கேட்​டதெல்​லாம் கொடுக்​கும் பிள்​ளை​யாருக்கு சிறப்பு பூஜை எல்​லாம் செய்​தா​ராம்.

இதனிடையே இவர், மலபார் தலை​யுடன் சேர்ந்து ‘சக்​தி’ ஆலோ​சனை நடத்​திய விவ​காரம் பவன் வரைக்​கும் எட்​டி​விட்​ட​தாம். இரு​வருக்​குமே தலைக்கு மேல் ‘கத்​தி’ தொங்​கு​கிறது. அதிலிருந்து சமாளிக்க வேண்​டு​மா​னால் மலர்க் கட்​சித் தலை​வர்​களை ‘ஐல​சா’ போட​வைக்​கும் வித​மாக கட்​சிக்​குள் ஏதாவது ‘புரட்​சி’ செய்ய வேண்​டும் என்​ப​தற்​காகவே இவர்​கள் இப்​படிச் செய்​கிறார்​கள் என்று பவன் வட்​டார போக்​கு​வரத்​தில் இருப்​பவர்​கள்​ பல்​லைக்​ கடிக்​கிறார்​களாம்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in