தமிழகம்

விசில் எம்​எல்ஏவின் தாம் தூம் நடவடிக்கைகள் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

“வருசத்​துக்கு ஒரு வேட்டி - சட்டை மாத்​துற அளவுக்கு எங்க தொகு​திக்​காரங்க வறுமை​யில வறண்டு போய் கிடக்​காங்க யுவர் ஆனர்” என்று பேர​வை​யில் குண்​டக்க மண்​டக்​கப் பேசி, சீருக்​குப் பேர்​போன தெற்​கத்தி தொகுதி மக்​களின் கோபத்​துக்கு ஆளான விசில் எம்​எல்ஏ பட்​டும் திருந்​த​வில்​லை​யாம். அண்​மை​யில் தனது தொகு​திக்​குள் இருக்​கும் செம்​மண் குவாரி​யில் இருந்து உரிய தஸ்​தாவேஜ்களு​டன் மண் அள்​ளிச் சென்ற லாரி ஒன்றை ஆதர​வாளர்​கள் சகிதம் துரத்​திச் சென்று மடக்​கி​னா​ராம்.

இதனால் அந்த ரூட்​டில் போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​துப் போன நிலை​யில், வட்​டாட்​சி​யரை ஸ்பாட்​டுக்கு வரவைத்து சகட்டு மேனிக்கு ராவி இருக்​கிறார். “முறையா அனு​மதி பெற்று மண் அள்​ளிட்​டுப் போறவங்கள நான் என்ன சார் பண்​ண​முடி​யும்?” என்று வட்​டாட்​சி​யர் பரி​தாப​மாய்க் கேட்க, “பொது​மக்​களுக்​குத் தொந்​தரவா இருக்​குல்​ல... நீங்க மக்​களுக்​காக வேலை செய்​றீங்​களா இல்ல வேற யாருக்​காச்​சும் வேலை செய்​றீங்​களா?” என்று எகிறிய எம்​எல்ஏ, அங்கு நடந்த சம்​பாஷணை​கள் அனைத்​தை​யும் தனது அடிவருடிகள் மூல​மாக அப்​படியே படம்​பிடித்​து, வரு​வாய்த் துறை​யினர் மீது தவறு இருப்​பது போல் சுடச் சுட ரீல்​ஸ்​களை தெறிக்​க​விட்​டா​ராம்.

இதைப் பார்த்​து​விட்டு தகித்த வரு​வாய்த் துறை​யினர், எம்​எல்​ஏ-​வின் தாம் தூம் நடவடிக்​கைகள் குறித்து சங்க ரீதி​யாக முதன்​மை​யானவர் தனிப்​பிரிவு வரைக்கும் தகவல் அனுப்பி விட்​டார்​களாம். இப்​படி இன்​னும் பல துறை​களி​லும் சம்​மன் இல்​லாமல் மூக்கை நுழைத்து ரீல்ஸ் கன்​டென்ட்​டு​களை உரு​வாக்​கு​வ​தில் முனைப்​பாக இருப்​ப​தால் அவரது தொகு​திக்கு உட்​பட்ட அரசு அதி​காரி​கள், அண்​ணன் பேரைக் கேட்​டாலே டர்​ராகி விடு​கிறார்​களாம். இதனிடையே, “அவருக்கு ‘தேவை​யானதை’ கொடுத்​தாச்​சுன்னா அவரு இந்​தப் பக்​கம் வரமாட்​டாருல்​ல...” என்று சிலர் சொன்ன யோசனையைக் கேட்டு அந்த ரூட்​டில் அப்​ரோச் பண்​ணும் முடிவுக்கு அதி​காரி​கள் சிலர்​ வந்​திரு​க்​கிறார்​களாம்​.

SCROLL FOR NEXT