தமிழகம்

மாங்​கனி மாநகர் விஐபி-யின் அறிவாலய விசிட் பின்னணி | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

மாங்​கனி நகரத்​தில் இருந்து சந்​திர​மான சூரியக் கட்சி மாநகர் விஐபி-​யும் அரசி​யான மண்​டலக் குழு தலை​வி​யும் 12 கவுன்​சிலர்​களைக் கூட்​டிக் கொண்டு அண்​மை​யில் அறி​வாலய விசிட் வந்​து​விட்​டுப் போனார்​களாம். வந்​ததன் நோக்​கமே அந்த மாவட்​டத்​தின் முன்​னாள் ‘ராஜ’ மாண்​புமிகு​வுக்கு மீண்​டும் மைய மாவட்​டச் செய​லா​ளர் பதவியைக் கொடுத்​து​வி​டாதீர்​கள் என்று வேண்​டு​கோள் வைக்​கத்​தா​னாம்.

“அமைச்​ச​ராக இருந்​தும் இவரால தன்​னோட மாவட்​டத்​துல ஒரு தொகு​தி​யைக் கூட ஜெயிச்​சுக் குடுக்க முடியல” என்று இவர்​கள் வைத்த குற்​றச்​சாட்​டைக் கேட்​டு, “உங்க மாவட்​டத்​துல தான் ஒரு தொகு​தி​யில கூட நம்ம கட்சி ஜெயிக்​கலியே... அது​வுமில்​லாம அவரோட பொறுப்​புல இருக்​கிற 3 தொகு​தி​களி​லும் நம்ம ரெண்​டாவது இடத்​தைப் பிடிச்​சுட்​டோமே” என்று சொன்​னார்​களாம் தலை​மைப் பூசா​ரி​கள்.

இருந்​தா​லும் ஒரே சமயத்​தில் பெரிய​வரை​யும் சின்​னவரை​யும் பார்த்து தங்​களது குமுறலைக் கொட்​டி​விட்​டுப் போனார்​களாம் வந்​தவர்​கள். இவர்​கள் பிராது கொடுக்க தலைநகருக்கு வந்து போன விஷ​யம் எதிர்​தரப்​புக்கு உடனே தெரிந்து விட்​ட​தாம்.

“ஒரு காலத்​தில் மாங்​கனி மாவட்​டத்​தில் தலை​மைக்கு எதி​ராக தைரிய​மாக ஜனநாயகக் குரல் எழுப்பி வந்த ‘வீர​மானவரை’ சமாளிக்க நடப்​புத் தலை​வ​ரால் தட்​டிக் கொடுத்து வளர்க்​கப்​பட்​ட​வர் தான் ராஜ​மான அந்த மாவட்​டச் செய​லா​ளர். இன்​றைக்கு யாரோ வந்து சொல்​கிறார்​கள் என்​ப​தற்​காக அவரை எப்​படி ஒதுக்​கிவைக்​கும் தலை​மை?” என்று எதிர்​தரப்​பு இப்​போது எக்​காளமிடு​கிற​தாம்​.

SCROLL FOR NEXT