‘அவார்டு’ நகரில் கடந்த 3 ஆண்டுகளாக ‘வேடிக்கை தெரு’ என்ற பெயரில் இளைஞர்கள் பங்கேற்கும் ஆடல் - பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான இந்த திருவிழா அண்மையில் கூடியது. கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகமே இந்த விழாவை நடத்தியது. ஆனால், இந்த ஆண்டு விழா நடத்தும் பொறுப்பை மாவட்ட விசில் பார்ட்டி எம்எல்ஏ ஒருவர் ஏற்றுக் கொண்டாராம்.
இதற்காக நகரில் உள்ள பட்டாசு கம்பெனி உரிமையாளர்கள், பருப்பு மில் ஓனர்கள் உள்ளிட்டோரிடம் கணிசமான தொகை டொனேஷனாகப் பெறப்பட்டதாம். ஆனால், வசூலான தொகையில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்டதாம். எஞ்சிய தொகையை யார் கணக்கிலோ ‘செல்வமாக’ சேர்த்துவிட்டார்களாம்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் டொனேஷன் கொடுத்தவர்களும், “இதுக்கு அவங்க எல்லாம் எவ்வளவோ தேவலாம் போலிருக்கே” என்று புலம்பித் தள்ளி வருகிறார்களாம்.