இன்னமும், போனவர்கள் போகட்டும் இருப்பவர்கள் இருக்கட்டும் என்ற மனநிலை மாறாமல் இருக்கிறாராம் இலைக் கட்சியின் எடக்கானவர். அதேசமயம், அடுத்த தேர்தலில் ஜென்ஸீ தலைமுறையினர் தான் அதிகளவில் வாக்களிக்கப் போகிறார்கள். அதனால் நாம் இன்னும் இப்படியே இருந்தால் காலம் தள்ள முடியாது என்ற கணிப்பை இலைக் கட்சித் தலைவர்கள் அவருக்கு எடுத்துச் சொல்லி வருகிறார்களாம்.
அதனால், கட்சியின் முகமாக இளையவர் ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அவர்கள், கொங்குச் சீமையைச் சேர்ந்த சகோதர ஹீரோ நடிகர்களில் யாராவது ஒருவரை கட்சிக்குள் கொண்டுவர உறவு முறை வழியாக அப்ரோச் செய்துபார்க்கவும் வலியுறுத்துகிறார்களாம்.