தமிழகம்

சூரிய கட்சியின் ‘பேட்​டை’ மாவட்​ட சலசலப்பு | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

அண்​மை​யில் திருத்தி அமைக்​கப்​பட்ட சூரியக் கட்சி பைலாக்​கள் பல மாவட்​டங்​களி​லும் சூட்​டைக் கிளப்பி இருக்​கிறது. ‘பேட்​டை’ மாவட்​டத்​துக்கு தற்​போது மாவட்ட தலை​மை​யாக இருக்​கும் சீனியருக்கு பதவி தங்​காது என்​ப​தால் அவரது இடத்​தைப் பிடிக்க பலபேர் முட்டி மோதுகிறார்​களாம். இந்த மாவட்​டம் இப்​போது வடக்​கு, தெற்கு என இரண்​டாகப் பிரிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில், வடக்கு மாவட்​டத்​துக்கு தலைமை ஏற்க குக்​கர் கட்​சி​யில் இருந்து ஜாகை மாறிய ‘கனவு’ நாவல் நாயகன் காய் நகர்த்​துகிறாராம். தேர்​தலில் அவருக்கு சீட் கொடுத்து கவுர​வித்த தலை​மைக்​கும் அவர் மீது பரிவு இருக்​கிற​தாம்.

அதேசம​யம் தெற்கு மாவட்​டத்​துக்​குத்​தான் ஏகப்​பட்ட கிராக்​கி​யாக இருக்​கிற​தாம். சூரியக் கட்​சி​யின் சிடுசிடு சீனியரின் பினாமி ரேஞ்​சுக்கு பேசப்​படும் கிரஷர் கம்​பெனி முதலா​ளி​யானவர் தெற்கு மாவட்​டத் தலை​மைப் பதவிக்கு ரொம்​பவே மெனக்​கிடு​கிறா​ராம்.

ஏற்​கெனவே கஜானா பொறுப்​பில் இருக்​கும் அவர் சீனியரின் சிஷ்யர் என்​பது ஒரு​புறமிருக்க, சூரியக் கட்​சித் தலை​வரின் மூத்த மகளும் இவருக்​காக பிரத்​யேக​மாக பிரஷர் கொடுக்​கிறா​ராம். ‘நவாப்’ தொகு​தி​யின் முன்​னாள் எம்​எல்​ஏ-​வான அந்த ‘அப்​பா’ ஒருபக்​க​மும், பெயருடன் வேலை ‘வடி​வாய்’ சேர்த்து வைத்​திருக்​கும் ஒன்​றியப் புள்ளி ஒரு​வரும் தனது பரி​வாரங்​களைத் திரட்​டிக் கொண்டு ஆலயத்​துக்​கும் பேட்​டைக்​கும் ட்ரிப் அடித்​துக் கொண்​டிருக்​கிறார்​களாம்.

இதற்கு நடு​வே, தற்​போது சிட்​டிங் தலை​மை​யாக இருப்​பவர், “அண்ணா காலத்து ஆளான என்​னையவே ஓரங்​கட்​டுனா தலை​மைக் கழகத்​துல இருக்​கிற மத்​தவங்கள எல்​லாம் என்ன பண்​ணு​வாங்​களாம்?” என்று தனக்கு நெருக்​க​மானவர்​களிடம் எக்​குத் தப்​புக் கேள்வி கேட்​டுக்​கொண்​டு இருக்​கிறா​ராம்​.

SCROLL FOR NEXT