தமிழகம்

வாட்டி வதைக்கப்படும் மணியான விசில் எம்எல்ஏ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘கோட்​டை’ மாவட்​டத்​தின் ‘கோட்​டை’ தொகு​தி​யின் மணி​யான விசில் எம்​எல்​ஏ-வை வந்த இடத்​தி​லும் வாட்டி வதைக்கிறார்களாம். ஏற்​கெனவே இலைக் கட்​சி​யில் மாண்​புமிகு வரைக்​கும் பதவி​களைப் பார்த்​தவர் திரு​வாளர் ‘மணி’.

ஆனால், அவரை​விட ஜூனிய​ரான வெவர​மான விஜய​மானவர் கட்சிக்​குள் தலை​யெடுத்​ததும் மணி​யானவரை தடம் தெரி​யாமல் ஆக்​கி​னார். இம்​முறை விருப்ப மனு கொடுத்​தும் அவருக்கு கட்சியில் சீட் கொடுக்​காமல் பார்த்​துக் கொள்​ளப்​பட்​டது. அந்த வருத்​தத்​தில் விசில் பார்ட்​டி​யில் சேர்ந்து எம்​எல்​ஏ-​வும் ஆகிவிட்டார்.

ஆனால், ‘முன்​னாள் மாண்​புமிகு’ பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவர் என்ற அடை​யாளங்​கள் இருப்​ப​தால் இவர் எந்​தக் காலத்​தி​லும் தங்களுக்​குப் போட்​டி​யாக வந்​து​விடக் கூடாது என தந்​திரக் கணக்குப் போடு​கிறார்​களாம் விசில் பார்ட்டி தலைகள்.

அண்​மை​யில் மாவட்​டத் தலைநகரில் நூறு நாள் சாதனை விளக்க நிகழ்வை நடத்​திய போது​கூட ‘மணி​யானவர்’ பெயரை போஸ்டர்களில் போடா​மல் புறக்​கணித்​திருக்​கிறார்​கள்.

அவருக்கு முறை​யான அழைப்​பும் இல்​லை​யாம். இப்​படி பலமுறை நடந்​து​விட்​டது என்​ப​தால் ‘மணி​யானவரும்’ சாதனை விளக்​கப் பொதுக்​கூட்​டத்​தில் கலந்து கொள்​ளாமலே புறக்​கணித்​திருக்​கிறார்.

போதாக்​குறைக்​கு, யாரை பகைத்​துக் கொண்டு இலைக் கட்​சி​யில் இருந்து விசில் பார்ட்​டிக்கு வந்​தாரோ அவரும் இப்​போது விசில் பார்ட்​டிக்கே விஜய​மாகி விட்​ட​தால், ‘இனி எங்​கிட்​டுடா போறது’ என்​று ‘மணி​யானவர்​’ மனம்​ நொந்​து கிடக்​கிறா​ராம்​.

SCROLL FOR NEXT