லஞ்சத்தை ஒழிப்பதே எங்களின் தாரக மந்திரம் என்று சொல்கிறார்கள் விசில் பார்ட்டி தலைவர்கள். ஆனால், தலைமை தான் அப்படி இருக்கிறதே தவிர பல இடங்களில் ஆளும் கட்சி கிளைகள் அள்ளித் தட்டி வருகிறார்களாம். முக்கியமாக, அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் விவகாரங்களில் புகுந்து விளையாடுகிறார்களாம்.
“ஃபோர்ட் தலைவரின் சொந்த ஊரில் இருக்கும் சட்டப்புள்ளி ஒருவர், “எதுவா இருந்தாலும் எங்கிட்ட கொண்டுவாங்க. தலைவர் நம்ம சொன்னா அப்பீலே சொல்ல மாட்டாரு” என்று சொல்லியே ஸ்வீட் பாக்ஸ்களை டப்பா டப்பாவாய் அள்ளுகிறாராம்.
மூத்த அமைச்சரின் பேரைச் சொல்லிக் கொண்டு ஒருவர் இப்படி ‘வசூல் ராஜ்ஜியம்’ நடத்துகிறார் என்றால் அதுகுறித்து தலைமைக்கு துப்புக் கொடுக்க வேண்டியதே போலீஸ் தான். ஆனால், முக்கியமாக போலீஸ் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபருக்குத்தான் சுளையாக எண்ணி வாங்குகிறாராம் அந்த சட்டப்புள்ளி.
இன்றைய தேதிக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் தான் விரும்பும் இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் பெற ‘15 எல்’ என ‘விலைப் பட்டியல்’ வைத்திருக்கிறாராம். இதெல்லாம் ‘ஃ போர்ட்’ தலைவருக்கு தெரியுமா என்று கேட்டால், “அவருக்கு தெரியாமலா இருக்கும்?” என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் சட்டப்புள்ளியின் சரித்திரத் தொடர்புகளை அறிந்தவர்கள்.