தமிழகம்

தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறுவன ‘தணிக்கை’ நிலவரம் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனத்​தில் கடந்த மூன்று ஆண்டு​களில் சுமார் ரூ.108 கோடிக்கு முறை​கேடு நடந்​திருப்​ப​தாக அண்​மை​யில் தகவல் வெளி​யானது. ஆனால், தமிழகம் முழு​வதும் மொத்​த​முள்ள 388 பிளாக்​கு​களில் 186 பிளாக்​கு​களில் மட்​டுமே தணிக்கை முடிந்​துள்​ள​தாம்.

அதிலேயே இந்த அளவுக்கு முறை​கேடு கண்​டு​பிடிக்​கப்​பட்​டிருக்​கும் நிலை​யில், மொத்த தணிக்​கை​யும் முடிந்​தால் முறை​கேடு ‘லெவல்’ இன்​னும் உயரும் என்​கிறார்​கள். பயனாளி​களுக்​குச் சேர​வேண்​டிய நிதியை ஒருசில அதி​காரி​களும் ஊழியர்​களும் சேர்ந்து கொண்டு கூட்​டுக்​கொள்ளை அடித்​திருப்​ப​தாக​வும், செய்​யாத செல​வு​களுக்கு எல்​லாம் போலி பில்​களை சேர்த்து பணத்​தைச் சுருட்டி இருப்​ப​தாக​வும் தணிக்கை அறிக்கை மிரட்​டு​கிற​தாம்.

அதனால் எஞ்​சிய பிளாக்​கு​களி​லும் தணிக்கை பணி​களை முடிக்க ஆளும் தரப்பு அவசரம் காட்​டும் நிலை​யில், அதை மட்​டுப்​படுத்​தும் வேலைகளில் சில அதி​காரி​கள் மும்​முர​மாக இருக்​கிறார்​களாம். கடந்த ஆட்​சி​யில் முதன்​மை​யானவருக்கு அடுத்த நிலை​யில் இருந்​தவரின் அலு​வல​கத்​தில் முக்​கியப் பொறுப்​பில் இருந்த பெண் அதி​காரி​யானவர் தற்​போது மகளிர் மேம்​பாட்டு நிறு​வனத்​தின் முக்கியப் பொறுப்​பில் இருக்​கிறா​ராம்.

இவர் நினைத்​தால் தணிக்கை நடவடிக்​கைகளை துரிதப்​படுத்த முடி​யும். ஆனால் ஏனோ தெரிய​வில்லை அதற்​கான வேலைகளை ஆறப்​போடு​வ​திலேயே அதி​காரி​கள் குறி​யாய் இருப்​ப​தாகச் சந்தேகம்​ கிளப்​பு​கிறார்​கள்​.

SCROLL FOR NEXT