தமிழகம்

‘ஹார்ஸ் பேர’ விவகாரமும், வில்லங்க விசில் பிள்ளைகளும் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘ஹார்ஸ் பேர’ வியா​பாரத்​தில் விசில் எம்​எல்​ஏ-க்​களை வீழ்த்த சூரியக் கட்சி தரப்​பில் சதி ஆலோ​சனை​கள் நடந்​த​தாகச் சொல்​லப்​படும் நிலை​யில், கோழிப்​பண்ணை மாவட்​டத் தலைநகர் தொகுதி எம்​எல்​ஏ-வுக்கு யார் மூல​மாகவோ 10 ‘சி’ கைமாறிய​தாக விசில் பிள்​ளை​களே வில்​லங்​கச் செய்தி பரப்​பு​கிறார்​களாம்.

இதே மாவட்​டத்​தில், ‘மங்​கல​மான’ தொகுதி எம்​எல்​ஏ-​வான ‘சந்​திர​மானவர்’ ஏற்​கெனவே இலைக் கட்​சி​யில் இருந்​தவர். தேர்​தல் சமயத்​தில் இவருக்கு சரி​யான பிரச்​சார வாக​னங்​கள் கூட இல்​லாமல் ஒரே ஒரு ஆட்​டோவை வைத்து ரவுண்​டடித்​துக் கொண்​டிருந்​தார்​கள்.

இந்த நிலை​யில், அண்​மை​யில் இவர் புத்​தம் புது இன்​னோவா கார் ஒன்​றுக்கு சொந்​தக்​காரர் ஆகி இருக்​கிறார். இதற்​கும் ஒரு கதை சொல்​பவர்​கள், “அந்த ‘மங்​கல​மான’ தொகு​தி​யின் சூரியக் கட்​சி​யைச் சேர்ந்த சாம்​ராட் அரசனின் பெயர் கொண்ட ஒன்​றியச் செய​லா​ளர் கல் குவாரி​கள் மற்​றும் சவுடு மண் பிசினஸில் கில்​லி​யாக கொடிகட்​டிப் பறப்​பவர்.

ஆட்சி மாற்​றத்​தால் அந்​தக் கொடியை யாரும் கீழே இறக்​கி​விடக் கூடாது என்​ப​தற்​காக அண்​ணன் தான் தொகுதி எம்​எல்ஏ மக்​கள் பணி ‘ஆற்​று​வதற்​காக’ தனது செல​வில் இன்​னோ​வாவை இறக்​குமதி செய்து கொடுத்​திருக்​கிறார்​” என்​கிறார்​கள்​.

SCROLL FOR NEXT