தமிழகம்

‘பெல்​’லுக்கு ஒரு ரவுண்டு ‘பாலீஷ்’ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

எப்​படி​யும் ஆட்​சியை தக்​க​வைத்​தாக வேண்​டும் என்ற தீர்மானத்துடன் தேர்​தலில் கூட்​டணி தோழர்​களுக்​கும் கஜானா கதவை தாராள​மாக திறந்​து​விட்​டது சூரியக் கட்​சி. இதற்​கான பெரும்​பகுதி பொறுப்பை ‘தீபம்’ மாவட்ட இனிஷியல் மாண்​புமிகு வசம் ஒப்​படைத்​திருந்​தார்​கள். இதில் மாம்பழ சிட்டிக்கு பக்கத்து மாவட்டத்தில் போட்டியிட்ட கதர் கட்சியின் ‘தமிழ்’ வேட்பாளர், தனது ‘பங்​களிப்​பை​யும்’ சூரியக் கட்சி தலை​மையிடமே கொடுத்து தேர்​தல் செலவு கணக்​கில் சேர்த்து செல​வழிக்​கச் சொல்லி இருந்​தா​ராம்.

ஆனால் அந்த மாவட்​டத்​தின் மூன்று தொகு​தி​களுக்​கான பொறுப்பை ஏற்​றிருந்த ‘பெல்’ பிர​முகர், தலை​மையி​லிருந்து வந்​திருந்த ‘கட்​டு​களில்’ பெரும்​பகு​தியை தனக்​காக ‘கட்​டம் கட்​டிக்’ கொண்​டா​ராம். இதனால், களத்​தில் நின்ற வேட்​பாளர்​கள் கைச்​செல​வுக்கு ரொம்​பவே திணறிப் போனார்​களாம். இது விஷய​மாக கதர் வேட்​பாளர் சூரியக் கட்சி தலை​மை​யிடம் அப்​போதே சுடச் சுட புகார் சொல்லி இருந்​தா​ராம். இதையடுத்​து, கஜானா பொறுப்பை ஏற்​றிருந்த ‘தீபம்’ மாவட்ட இனிஷியல் புள்​ளியை அழைத்து விசா​ரணை நடத்​தி​ய​தாம் சூரியக் கட்சி தலை​மை.

அதனைத் தொடர்ந்து அண்​மை​யில் ‘பெல்’ பிர​முகரை தனது இருப்​பிடத்​துக்கே வரவைத்த இனிஷியல் புள்​ளி, தேர்​தல் வரவு - செல​வு​களை ஒப்​படைக்​கும்​படி சொன்​னா​ராம். அவரும், ‘வந்​தது’ முழு​வதை​யும் பட்​டு​வாடா செய்​து​விட்​ட​தாக பக்கா கணக்​குக் கொடுத்​தா​ராம். அதைப் பார்த்து இன்​னும் சூடான இனிஷியல், “நீ யார் யாருக்கு எவ்​வளவு கொடுத்​தேன்ற கணக்கு எல்​லாம் எங்​கக்​கிட்ட இருக்​கு. உண்​மையச் சொல்​றி​யா.. இல்​ல...” என்று இழுத்​தா​ராம்.

அப்​போதும் தனது நிலைப்​பாட்​டில் உறு​தி​யாக நின்​றா​ராம் ‘பெல்’. இனி பேசி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்த இனிஷியல் புள்​ளி, தனது ஆட்​களை விட்டு ‘பெல்​’லுக்கு ஒரு ரவுண்டு ‘பாலீஷ்’ போட்​டா​ராம்.

அதற்கே தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் தலை தொங்​கிய​வர் அரை மயக்​கத்​திலேயே, பதுக்​கிய கரன்சி கட்​டு​கள் எங்​கெல்​லாம் இருக்​கிறது என்ற விவரத்தை ஒப்​பித்​தா​ராம். அவரை அங்கு படுக்க வைத்​துக் கொண்டே ‘பெல்​லாரின்’ சொந்த மாவட்​டத்​துக்கு தனது ஆட்​களை அனுப்​பிய இனிஷிய​லார், பதுக்​கல் கரன்சி முழு​வதை​யும் பறி​முதல் செய்து தனது இருப்​பிடம் கொண்டு வந்து சேர்த்​தா​ராம்.

அதேசம​யம், ‘பாலீஷ்’ உக்​ரத்​தில் முகமெல்​லாம் ‘பணி​யார​மாகிக்’ கிடந்த மிஸ்​டர் ‘பெல்​லாரை’ இரண்டு நாட்​கள் தனது இருப்​பிடத்​திலேயே தங்​க​வைத்து முறை​யாக ‘ட்​ரீட்​மென்ட்’ எல்​லாம் கொடுத்து ‘பாலீஷ்’ போட்ட சுவடே தெரி​யாமல் அவரை சொந்த ஊருக்கு பத்​திர​மாக வழியனுப்பி வைத்​தா​ராம் இனிஷிய​லார். வழக்​க​மாக ஆச்சா ஊச்சா என டாம்​பீகம் செய்​யும் ‘பெல்​லார்’ இந்த ‘பாலீஷ்’ ட்ரீட்​மென்​டுக்​குப்​ பிறகு சப்​த நாடி​யும்​ அடங்​கிக்​ கிடக்​கிறா​ராம்​.

SCROLL FOR NEXT