தமிழகம்

விசில் பார்ட்டிக்கு ‘செக்’ வைக்க மலர் கட்சி முனைப்பு? | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

கதர் பார்ட்​டி​யுடன் விசில் பார்ட்டி அநி​யா​யத்​துக்கு ஒட்டி உறவாடுவதை மலர் கட்​சித் தலைமை அறவே ரசிக்கவில்லையாம். போதாதுக்​கு, ‘வில்​லான’ விசில் அமைச்​சர் “2029-ல் மிகப்​பெரிய அரசி​யல் மாற்​றம் நடக்​கும். அப்​போது நீட் தேர்வு ஒழிக்​கப்​படும். அதற்​கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்​றன” என்று பேசி டெல்​லியை சீண்டி இருக்​கிறார்.

இதையடுத்​து, விசில் பார்ட்டி ஆட்​சிக்கு எந்த விதத்​தில் செக் வைக்கலாம் என்​பது குறித்து பல திசைகளி​லும் ஆலோ​சனை நடத்தி வரு​கிற​தாம் மலர் கட்​சித் தலை​மை. இந்த நிலை​யில், ‘குதிரை பேரம்’ தொடர்​பான முக்​கியக் கட்​சிகளின் புகார்​களை வைத்து லோக்​பவன் தலை​வர் மூல​மாக ஆட்​சிக்கு நெருக்​கடி உண்டாக்க முடி​யுமா என்று உயர்​மட்ட அளவில் ஆலோ​சனை நடத்​தப்​பட்​ட​தாகச் சொல்​கிறார்​கள்.

இதையெல்​லாம் தெரிந்து கொண்​டு​தான், தமிழ்த்​தாய் வாழ்த்து தொடங்கி நீட் போராட்​டங்​கள் வரை அனைத்​தி​லும் டெல்​லியை பகைக்​காமல் அனுசரித்தே போகிற​தாம் விசில் தலை​மை. இருந்​த​போதும், பட்​ஜெட் கூட்​டத் தொடருக்கு முன்​ன​தாகவே லோக்​பவன் தலை​வர் மூல​மாக அதிரடி சர்ச்சை ஒன்று கிளப்​பப்​படலாம் என்று சொல்​பவர்​கள், “சுதந்​திரதினத்​தன்று முதன்​மை​யானவரை கொடியேற்​ற​விடா​மல் தடுக்க முடி​யுமா என்று கூட ஆலோ​சனை​கள் போய்க்​கொண்​டிருக்​கின்​றன” என்​கிறார்​கள்.

இதனிடையே, விசில் பார்ட்டி எம்​எல்​ஏ-க்​கள் சிலர் மீது தலைமைக்கு கொஞ்​சமே கொஞ்​சம் டவுட் வந்​திருக்​கிற​தாம்.

அப்​படி லிஸ்ட் எடுக்​கப்​பட்ட நபர்​களின் உயிருக்கு அச்​சுறுத்​தல் இருப்​ப​தாகச் சொல்லி போலீஸ் ஷேடோ போடப் போகிறார்​களாம். இந்த ஷேடோக்​களின் தலை​யாய கடமையே அந்த எம்​எல்​ஏ-க்​கள் எங்​கெல்​லாம் போகிறார்​கள் யாரோடு எல்​லாம் ‘லிங்​கில்’ இருக்கிறார்​கள் என்று துப்​பறிந்து மேலிடத்​துக்​கு தகவல்​ சொல்வதுதா​னாம்​.

SCROLL FOR NEXT