‘கோழிப்பண்ணை மாவட்டத்திலும், மேங்கோ சிட்டி மாவட்டத்திலும் ஓடும் தனியார் பேருந்துகள் பலவற்றில் அறிவிக்கப்படாத கட்டண உயர்வை திடீரென அமல்படுத்தி இருக்கிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் பறந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள், தனியார் பேருந்துகளை மறித்து ஆய்வுகளை நடத்தினர். கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது அந்த ஆய்வுகளின் போது ஊர்ஜிதமானதால் சம்பந்தப்பட்ட பேருந்து முதலாளிகளை அழைத்து வார்னிங் கொடுத்திருக்கிறார்கள் ஆட்சியர்கள்.
இதையடுத்து தனியார் பேருந்து முதலாளிகள் அமைச்சரைச் சந்தித்துப் பேசி தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அவர்களின் பேச்சில் ‘எந்த விதத்தில்’ அமைச்சர் சமாதானமானார் என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்ட பேருந்துகளில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணங்களையே இப்போது மீண்டும் ‘தில்லாக’ வசூலித்து வருகிறார்கள். முன்பு, புகார் வந்ததும் பேருந்துகளை மறித்து அதிரடி ஆய்வுகளை மேற்கொண்ட ஆட்சியர்களும் இப்போது கப் சிப் ஆகிவிட்டார்கள்.