தமிழகம்

‘பொய்​கை​யான’ அதிரடி ஆளும் கட்சி எம்​எல்ஏவின் ‘கட்டிங்’ கதை | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘எங்க ஆட்​சி​யில் ஒரு பைசா லஞ்​சம் இல்​லை” என்​கிறார் முதன்மை​யானவர். ஆனால், தென் கோடி மாவட்​டத்​தில் இருக்​கும் ‘பொய்​கை​யான’ அதிரடி ஆளும் கட்சி எம்​எல்ஏ ஒரு​வர், ஏரி​களில் சவுடு மண் அள்​ளுவதற்​கும், கல் குவாரி​களில் ஏற்​றப்​படும் லோடுகளுக்​கும் முந்​நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரைக்​கும் ‘கட்டிங்’ கேட்​கிறா​ராம். தானே நேரடி​யாக கலெக்‌ஷனுக்​குப் போனால் கலவர​மாகி​விடும் என்​ப​தால் “நீங்​களே வாங்​கிக் கொடுத்துடுங்க சார்” என்று அதி​காரி​களுக்கு அட்​வைஸ் கொடுத்திருக்​கிறா​ராம்.

தனிப்​பட்ட முறை​யில் கந்​து​வட்டி தொழிலில் கல்​லாக்​கட்​டும் திருமிகு ‘பொய்​கை’​யின் சிஷ்யக் கோடிகள் கஞ்​சா, குட்கா வியாபாரத்​தி​லும் கொடிகட்​டிப் பறக்​கிறார்​களாம். மலை​யாள தேசத்​தில் ‘குலுக்​கல்’ பிசினஸிலும் பிர​மாதப்​படுத்​தும் இவர், அந்தத் தொழிலை வாட்ஸ் அப் குழுக்​கள் மூல​மாக முத்​துநகரிலும் அத்​து​ மீறி நடத்தி அள்​ளித் தட்​டு​வ​தாகச்​ சொல்​கிறார்​கள்​.

SCROLL FOR NEXT