தமிழகம்

ஆதங்கத்தில் ‘தரணி’ தலைவி | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

இங்கே மாதருக்கு உரிய மரியாதை இல்லை என்று சொல்லிவிட்டு கதர் கட்சியிலிருந்து காவிக் கட்சிக்கு மாறிய ‘தரணி’ தலைவிக்கு, இன்னும் உரிய அங்கீகாரத்தை வழங்காமல் வைத்திருக்கிறது காவிக் கட்சி.

அண்மையில் வெளியான கட்சி நிர்வாகிகள் பட்டியலிலும் அம்மணிக்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் இல்லை. ‘மலர்’ நடிகைக்கு மாநிலப் பொறுப்பு அறிவித்ததைப் பார்த்துவிட்டு, “அவரை எல்லாம் விடவா நான் நாலாந்தரமாகப் போய்விட்டேன்” என்று ஆதரவு வட்டத்தில் ஆதங்கத்தைக் கொட்டினாராம்.

இந்த நிலையில், அவரது ‘கோடு’ தொகுதியில் இம்முறை அவரையே நிறுத்த திட்டம் போடுகிறதாம் காவிக் கட்சி. ஆனால், “இப்போது என்னால் அங்கே கரைசேர முடியுமா என்று தெரியாது. அதற்குப் பதிலாக மத்தியில் ஏதாவது வாரியம், ஆணையம் எதிலாவது ஒரு பொறுப்பைக் கொடுத்தால் நல்லது” என்று சொல்லி தேர்தலில் போட்டியிட மறுதலித்து வருகிறாராம் ’தரணி’ தலைவி.

SCROLL FOR NEXT