தமிழகம்

பார்ட்டி ஃபண்ட் விவகாரம்: போலீஸ் கையில் சிக்காத ‘முத்தான’ குமார் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘பார்ட்டி ஃபண்ட் வசூலித்த விவகாரத்தில் ‘கிங்க்’ குமாரை போலீஸ் உடனடியாக தூக்கி உள்ளே வைத்துவிட்டது. ஆனால், முன்னாள் ‘படிப்பு’ மாண்புமிகுவின் உதவியாளர் என்று சொல்லிக்கொண்டு உலா வந்த ‘முத்தான’ இன்னொரு குமாரை கெத்தாக வெளியில் சுற்ற விட்டிருக்கிறார்களாம். அவரது சொந்த ஊரான ‘பாக்கம்’ கிராமத்தில் விசாரித்தால் “தம்பு இங்க தானே இருக்கார்” என்று இயல்பாகச் சொல்கிறார்கள்.

இலைக் கட்சி ஆட்சியில் ‘முடியாரின்’ குவாரி ஊழல் வழக்கை ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போட விழுப்புரம் மாவட்ட இலைக் கட்சியின் புரட்சி ‘முகம்’ புள்ளி சகாயம் செய்தாராம். அதேபோல், இலைக் கட்சியில் இருந்த விஜயமானவரின் குட்கா வழக்கை இழுவையில் வைக்க ‘முடியாரின்’ மகன் தனக்குத் தெரிந்த உபாயங்களை விஜயமானவருக்குச் சொன்னாராம்.

அந்த வகையில், சிறுத்தைக் கட்சியில் இருக்கும் ‘முக்கிய’ தலைகள் சிலர் இப்போது சூரியக் கட்சியில் இருக்கும் பெருந்தலைகளுக்கு ‘ராஜாங்க’ விஷயத்தில் தங்களால் முடிந்ததைச் செய்து கொடுக்கிறார்களாம்.

சாதி ரீதியில் சூரியக் கட்சியின் முன்னாள் ‘துதிக்கையார்’ மாண்புமிகு வழியாகவே இந்தக் காரியங்களை முடிக்கிறார்களாம் சூரியக் கட்சி தலைகள். அந்த ரூட்டைப் பிடித்துத்தான் பார்ட்டி ஃபண்ட் விவகாரத்தில் போலீஸ் கையில் சிக்காமல் தப்பி வருகிறாராம் ‘முத்தான’ குமார்.

SCROLL FOR NEXT