‘தமிழகத்தின் அனைத்துக் கட்சி விஐபி-க்களுக்கும் துபாய் சம்பந்தப்பட்ட ‘சீக்ரெட் முதலீடுகளை’ கவனித்து வருபவர் அந்த இரண்டெழுத்து தொழிலதிபர். அதனாலேயே இவரது பெயருக்கு முன்னால் துபாயும் அடைமொழியாக நிற்கும்.
நிலக்கரி சுரங்கம் அருகில் இருக்கும் ‘குடியான’ ஊரில் உள்ள இவரது வீட்டுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் சர்வ சாதாரணமாய் வந்து போவார்கள். அரசு காண்ட்ராக்டராகவும் இருக்கும் இவர், கடந்த ஆட்சியில் ‘வளத்துறை’ சம்பந்தப்பட்ட பணிகளை பெருமளவில் எடுத்துச் செய்து வந்தார்.
இந்த நிலையில், “மக்கள் அறியாமையால் தவறு செய்துவிட்டார்கள். நாளைக்கே கூட எலெக்ஷன் வந்தாலும் நான் தான் ஜெயிப்பேன்” என்று தன்னை மூன்றாமிடத்துக்கு தள்ளிய தொகுதியில் உட்கார்ந்து கொண்டு பேட்டியளித்திருக்கும் சூரியக் கட்சியின் சூப்பர் சீனியர் ‘முருகன்’ தலைவர், ‘துபாய்’ புள்ளியின் பேரனுக்கு ‘கதிரான’ தனது மகன் வயிற்றுப் பேத்தியை சத்தமில்லாமல் சம்பந்தம் பேசி முடித்திருக்கிறார்.
அனைத்து கட்சித் தலைவர்களிடமும் ‘அன்பான’ நட்பு வைத்திருக்கும் துபாய் தொழிலதிபரை சம்பந்தி ஆக்கிக் கொண்டால் தனக்கும் மகனுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று சூப்பர் சீனியர் தலைவர் கருதுகிறாராம்.