தமிழகம்

‘மலர்ச்​சி’ கட்​சியின் 2 எம்எல்ஏக்களுக்கு ‘விசில்’ தந்த உத்தரவாதம் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘மலர்ச்​சி’ கட்​சி​யின் இரண்டு எம்​எல்​ஏ-க்களை ராஜி​னாமா செய்ய வைக்க விசில் பார்ட்​டி​யின் ‘குலுக்​கல் மாப்​பிள்​ளை’ ரொம்​பவே மெனக்​கிடு​கிறா​ராம். எம்​எல்​ஏ-க்​கள் பயிற்சி வகுப்​புக்கு சமுகமளித்திருந்த அந்த இரண்டு எம்​எல்​ஏ-க்​களை​யும் தனி​யாக சந்தித்​துப் பேசிய திரு​வாளர் ‘மாப்​பிள்​ளை’, “ராஜி​னாமா செய்​து​விட்டு மீண்​டும் அதே தொகு​தி​யில் தனி சின்​னத்​தில் போட்டியிடுங்கள். எவ்​வளவு செல்​வா​னாலும் நாங்​கள் பார்த்​துக் கொள்​கிறோம்” என்று உத்​தர​வாதம் அளித்​தா​ராம். இதையடுத்து அவர்​கள் இரு​வரும் எம்​எல்ஏ பதவி​களை ராஜி​னாமா செய்​யும் முடிவுக்கு கிட்​டத்​தட்ட வந்​து​விட்​ட​தாகச் சொல்​கிறார்​கள்.

அதேசம​யம், தமிழக அரசின் டெல்லி சிறப்​புப் பிர​தி​நிதி பதவியை ‘மலர்ச்சி’ தலை​வருக்கு கேட்​டுப் பெறு​வதற்​கான பேச்சுவார்த்தையும் நடந்து வரு​வ​தாக ஒரு செய்தி கசிகிறது. இதற்கு மத்​தி​யில் தான், பாராளு​மன்​றத்​தில் 30 ஆண்​டு​கள் தான் முழங்​கியதை எல்​லாம் நூலாக தொகுத்​திருக்​கும் ‘மலர்ச்​சி’ தலைவர், டெல்​லி​யில் அதன் வெளி​யீட்டு விழாவை வைத்து அதற்காக முதன்​மை​யானவரை​யும் அழைத்​திருக்​கிறார்.

இதுகுறித்து விமர்​சனங்​களை எடுத்து வைக்​கும் சூரியக் கட்சி சூரர்கள், “30 ஆண்​டு​களும் சூரியக் கட்சி பிர​தி​நி​தி​யாகத் தான் பாராளு​மன்​றத்​தில் முழங்​கினோம் என்​ப​தை​யும் ‘மலர்ச்​சி’ தலைவர் மறக்​காமல் இருந்​தால் சரி​தான்” என்று ‘பிட்​’டைப்​ போடுகிறார்​கள்​.

SCROLL FOR NEXT